வனிதாவை கிண்டலடித்து லாஸ்லியாவை சிரிக்க வைத்த கவின் - சாண்டி!

வனிதாவை கிண்டலடித்து லாஸ்லியாவை சிரிக்க வைத்த கவின் - சாண்டி!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 4, 2019, 4:21 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் நடவடிக்கைகளை கவின் மற்றும் சாண்டி குழுவினர் கிண்டலடித்துள்ளனர்.

8 போட்டியாளர்கள் இருக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி ஆகிய மூவரும் விருந்தாளிகளாக வந்துள்ளனர். கவின் -லாஸ்லியா காதலை வனிதா கையிலெடுத்திருக்கும் நிலையில் சாக்‌ஷியின் வருகை பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சாக்‌ஷியின் வருகை ஷெரினை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

கவினை பழிவாங்கத்தான் சாக்‌ஷி வந்திருப்பதாக முதல் புரமோவில் சாண்டி கூறியிருந்தார். இரண்டாவது புரமோவில் மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நடுவர்களாக அமர்ந்துள்ளனர். இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்துள்ளனர். அப்போது லாஸ்லியா மன்னிப்பு கேட்பதால் இவர்கள் எல்லாம் நல்லவர்களாக மாறிடமாட்டாங்க என்கிறார். அதற்கு பதிலளிக்கும் வனிதா, யார் நல்லவங்க என்று கேள்வி எழுப்புகிறார். இடைமறித்த ஷெரின் லாஸ்லியாவின் திமிரு பிடித்த நடவடிக்கைகள் என் மனதை மிகவும் புண்படுத்தியது என்கிறார். இதை அமைதியாக கேட்கிறார் சாக்‌ஷி.


இதையடுத்து கவினிடம் பேசும் லாஸ்லியா, அவர்கள் பெர்ஷனல் விஷயங்களைப் பேசியதால் தான் நான் அப்படிப் பேசினேன் என்கிறார். லாஸ்லியாவை சமாதானப்படுத்திய கவின், உனக்கு ஒன்னு தெரியுமா இல்லையா, ஒட்டு மொத்த உலகத்திலேயே அவர்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம் என்றும் கூறினார்.

தற்போது 3-வது புரமோ வெளியாகியுள்ளது. அதில், சாக்‌ஷி மற்றும் மோகன்வைத்யாவிடம் வனிதா ஏதோ பேசுகிறார். அதை வீட்டுக்கு வெளியே அமர்ந்து கண்ணாடி வழியாக பார்த்து ரசிக்கும் சாண்டி, கவின், லாஸ்லியா ஆகியோர் வனிதாவின் பேச்சுக்கு டப்பிங் செய்கின்றனர். இதைப்பார்த்து லாஸ்லியா சிரித்து மகிழ்கிறார். எனவே இன்றைய நிகழ்ச்சியில் சண்டையும், நகைச்சுவையும் கலந்தே இருக்கும் எனத் தெரிகிறது.

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...