இனி கவனமாக இருப்பேன்... பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி!

இனி கவனமாக இருப்பேன்... பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி!
நடிகை சாக்‌ஷி அகர்வால்
  • News18
  • Last Updated: September 8, 2019, 7:35 PM IST
  • Share this:
பார்வையாளர்களை நாய்கள் என்று கூறியதற்காக நடிகை சாக்‌ஷி மன்னிப்பு கோரியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்தவாரம் ஏற்கெனவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தாளிகளாக சென்றனர். அந்த நேரத்தில் ஷெரின் - தர்ஷன் இடையேயான நட்பை காதல் என்று வனிதா கூறியதால் ஷெரின் மனமுடைந்தார்.


அவரை ஆறுதல்படுத்திய நடிகை சாக்‌ஷி நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை நாய்கள் என்று ஷெரினிடம் கூறினார். இதற்கு பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சாக்‌ஷி பேசியதை மேடையில் குறிப்பிட்டார். ஆனால் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுப்பும் தெரிவித்தார் சாக்‌ஷி.

Loading...

இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் நடிகை சாக்‌ஷி, “அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும். எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனது அறிக்கை பார்வையாளர்களைப் பொதுமைப்படுத்துவதாக இல்லை. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் ப்ளீஸ் என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திடீர் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்த தேவயானி குடும்பம்! 
View this post on Instagram
 

#sakshiagarwal @_sakshi_official_ @iamsakshiagarwalofficialfan @sakshi_army_offl @sakshi_agarwal_affical_army @sakshi_agarwal_fc__ @sakshiagarwal_online_._ @sakshi_veriyans @sakshi_veriyan @sakshi_agarwal_fc #bigboss3 #bigbosspromo #bigbossfununlimited mited #bigbosstamil #galatta #bigboss2tamil #hotstar #vijaytv #vijaytvshow #kamlahassan #bigboss #bigboss3tamilupdates #bigbosstrolls😂 #promo #bb3tamil #bigbossmemes #trending #aandavar #bigbosstamiltroll #bbtamilcontestants #tamilmemes #bb3 #bb3tamil #bigbossmemes #bigbossmeme #bigbosstamilmemes @sakshiinternationalfans @tamilbiggboss3.0 @biggboss_3.0 @biggboss3offl @bigboss3_troll @bigg_boss_season_03 @biggbossthree @biggboss_troll @biggboss_paithyangal @sakshiagarwal_fan @sakshi_army_da


A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on


வீடியோ பார்க்க: டாஸ்மாக்கில் 120% லாபத்தில் விற்கப்படும் மதுபானங்கள்!

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...