ரகசிய அறைக்குள் சாக்‌ஷி... பிக்பாஸ் வீட்டில் மாற்றத்தை அறிவித்த கமல்!

கடந்த வாரம் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக வீண் பழி சுமத்திய காரணத்துக்காக மீராமிதுனை மக்கள் வெளியேற்றினர்.

news18
Updated: August 3, 2019, 3:34 PM IST
ரகசிய அறைக்குள் சாக்‌ஷி... பிக்பாஸ் வீட்டில் மாற்றத்தை அறிவித்த கமல்!
கமல்ஹாசன்
news18
Updated: August 3, 2019, 3:34 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ரகசிய அறைக்கு நடிகை சாக்‌ஷி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது 40 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார், மீரா மிதுன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், அபிராமி வெங்கடாச்சலம், சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, ரேஷ்மா ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்படுவர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தும், மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் அந்த போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.


கடந்த வாரம் சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக வீண் பழி சுமத்திய காரணத்துக்காக மீராமிதுனை மக்கள் வெளியேற்றினர். அதேபோல் கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரகசிய அறை ஒன்றையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

இந்தவாரம் வெளியேற்றப்படும் நடிகை சாக்‌ஷி அந்த அறைக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரகசிய அறைக்குள் இருந்தபடி லாஸ்லியா - கவின் மற்றும் வீட்டிலிருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் ஒரு வாரம் கண்காணிக்கும் சாக்‌ஷி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார். அதனால் முக்கோணக் காதல் முற்றுப் பெறும்.

அப்படி சாக்‌ஷி ரகசிய அறைக்குள் அனுப்பப்படாமல் காப்பாற்றப்பட்டால் ரேஷ்மாவை வீட்டை விட்டு வெளியேற்றவும் வாய்ப்புள்ளது. இதுஒருபுறமிருக்க இந்த வாரத்தில் நடிகர் சரவணன் - சேரன் இடையேயான பனிப்போர் வார்த்தைப் போராக மாறியுள்ளது. அதனால் அவர்களுக்காக குறும்படம் ஒளிபரப்பவும் வாய்ப்புகள் உண்டு.

Loading...

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...