சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் காரணமா? - பிக்பாஸுக்கு ரசிகர்கள் போட்ட குறும்படம்

news18
Updated: August 6, 2019, 2:38 PM IST
சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் காரணமா? - பிக்பாஸுக்கு ரசிகர்கள் போட்ட குறும்படம்
கமல் | சரவணன்
news18
Updated: August 6, 2019, 2:38 PM IST
பிக்பாஸ் போட்டியிலிருந்து நடிகர் சரவணன் நேற்று திடீரென வெளியேற்றப்பட்டார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு போட்டியாளரின் நடவடிக்கைகள் பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகின்றன.

அதன்படி மீரா மிதுன் சேரன் தன்னை தவறாக தொட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் சர்ச்சையைக் கிளப்பினார். அப்போது பேசிய கமல், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, தனது கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.


பதிலுக்கு, பாருங்கள் சரவணன் கூட அதைக் கண்டித்திருப்பார் போல என்று கமல்ஹாசன் கூற, நான் கல்லூரிக் காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறினார் சரவணன். அதிர்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூறினார்.இந்த விவகாரம் பார்வையாளர்கள் மத்தியில் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் கண்டனத்திற்குள்ளானது. இதை கவனித்த பிக்பாஸ் சரவணனை மன்னிப்பு கேட்கும்படி கூறினார். இதற்காக கன்பெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்டார் சரவணன். அப்போது, "கல்லூரியில் படிக்கும் போது நான் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதுமாக பேச முடியவில்லை. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார்.

Loading...

சரவணன் மன்னிப்பு கோரியதை அடுத்து இந்த விவகாரம் முடித்துவைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சேரனை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார் சரவணன். இந்த விவகாரத்தை கையிலெடுத்த கமல்ஹாசன் சேரன் பக்கம் நின்றார்.

உச்சநட்சத்திரமாக இருந்தாலும் நீங்கள் சேரனை அப்படி பேசக்கூடாது என்று சரவணனிடம் கமல் கூற அதற்காக சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார் சரவணன். இந்த விவகாரத்தில் திரைத்துறையினரும் சேரனுக்கு ஆதரவாக நின்றனர். இயக்குநர் வசந்தபாலன் சேரனை பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனே வெளியேற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

சரவணன் | சேரன்


இந்நிலையில் நேற்று சரவணனை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், பெண்களைப் பற்றிய தவறான கருத்துகளைக் கூறியதால், பிக்பாஸ் குழு உங்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இப்படியே சென்று விடுங்கள் என்று கூறினார். இப்படியே சென்று விடுங்கள் என்று கூறியதற்கு மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து வெளியேறினார் சரவணன்.

சரவணன் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூகவலைதளங்கலில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கடந்த வார இறுதியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஆள்மாறாட்டம் டாஸ்க்கை நடத்தும் போது நடிகர் சரவணன் ‘இவன் கோத்து விடுறான்’ என்று மதுமிதாவிடம் கூறுகிறார். கமல்ஹாசனையே ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப்பட்டார் என்பது நெட்டிசன்களின் கருத்தாகியுள்ளது.பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் செய்த தவறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க பிக்பாஸ் குறும்படம் ஒன்றை வெளியிடுவார். இந்த விவகாரத்தில் பிக்பாஸுக்கே குறும்படம் காட்டியுள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...