வனிதாவை கன்னத்தில் அறைந்த முகென்... ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டாரா?

Bigg Boss Tamil 3 | வனிதா மீண்டும் உள்ளே வந்தவுடன் எதிர்பார்த்தது போலவே பிக்பாஸ் வீடு பரபரப்பானது.

news18
Updated: August 15, 2019, 11:18 AM IST
வனிதாவை கன்னத்தில் அறைந்த முகென்... ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டாரா?
பிக்பாஸ்
news18
Updated: August 15, 2019, 11:18 AM IST
பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்துள்ள வனிதாவை முகென் கன்னத்தில் அறைந்து விட்டதாகவும், அதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டதை அடுத்து கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார்.

கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பின்னரும் நிகழ்ச்சி அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. இதனால் வனிதா விஜயகுமாரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியது நிகழ்ச்சிக் குழு.


வனிதா உள்ளே வந்தவுடன் எதிர்பார்த்தது போலவே பிக்பாஸ் வீடு பரபரப்பானது. பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவுடன் அபிராமி -முகென் காதல் விவகாரத்தை கையிலெடுத்த வனிதா, இருவருக்குள்ளும் பிரச்னையை மூட்டி விட்டு அதில் வெற்றியும் கண்டார்.

இதையடுத்து மதுமிதாவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்ட வனிதா, பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறி மதுமிதாவைத் தூண்டி விட்டார். அவரும் உணர்ச்சிவசப்பட்டு கத்தவே அதை கேரட் சீவிக் கொண்டே கூலாக ரசித்தார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் வனிதாவின் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த முகென், அவரை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும், அதனால் முகென் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...
முகென் தன்னை கன்னத்தில் அறைந்ததால் உடனே பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதாவும் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...