பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் மீராமிதுன்?

Bigg Boss Tamil 3 - தொடர்ந்து போட்டியாளர்களிடையே உரையாடிய கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரகசிய அறையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

news18
Updated: July 28, 2019, 1:23 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் மீராமிதுன்?
மீரா மிதுன்
news18
Updated: July 28, 2019, 1:23 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை மீராமிதுன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார் ஆகிய 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சேரன், சரவணன், சாக்‌ஷி அகர்வால், கவின், மீரா மிதுன், அபிராமி உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இயக்குநர் சேரன் காப்பாற்றப்பட்டுவிட்டதாக நேற்று கமல்ஹாசன் அறிவித்தார்.


அதேவேளையில் இயக்குநர் சேரன் மீது வீண்பழிசுமத்திய மீரா மிதுனுக்கும் குறும்படம் காட்டினார். தொடர்ந்து போட்டியாளர்களிடையே உரையாடிய கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரகசிய அறையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதனால் இந்தவாரம் வெளியேற்றப்படுவோர் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவாரா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.

ஆனால் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரகசிய அறை குறித்தும் கமல்ஹாசன் பேசியுள்ளார். அரங்கில் உள்ள பார்வையாளர்களும் ரகசிய அறையை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Loading...

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...