விஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது... கமல் தலையிட வேண்டும் - மதுமிதா அதிரடி!

விஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது... கமல் தலையிட வேண்டும் - மதுமிதா அதிரடி!
மதுமிதா
  • News18
  • Last Updated: September 4, 2019, 8:44 PM IST
  • Share this:
விஜய் டிவி நிர்வாகம் தன் மீது பொய்ப் புகார் அளித்துள்ளதாக நடிகை மதுமிதா குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.


”அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.



இந்நிலையில் நேற்று நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒருநாள் ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம்.அதை அப்போது ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மதுமிதா, “நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்துகிறேன். என் மீது பொய் புகார் அளித்துள்ளது விஜய் டிவி. எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. என் மீது புகார் கொடுத்ததற்கு பின் விஜய் டிவியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்றுவரை விஜய் டிவி வகுத்த வழிமுறைப்படியே நடக்கிறேன். திரைத்துறையில் இருக்கும் என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. விஜய் டிவியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனும் தலையிட்டு இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்

இதுவரை நான் வெளியில் சென்று மருத்துவம் பார்க்கவில்லை. நிகழ்ச்சிக் குழு அனுமதித்த மருத்துவர்தான் எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

படிக்க: மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்!
 வீடியோ பார்க்க: பிக்பாஸ் மதுமிதா மீது காவல்நிலையத்தில் விஜய் டிவி புகார்!


First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்