மதுமிதா பிரஸ் மீட்டின் பின்னணி என்ன? - பிக்பாஸ் டிஆர்பி-யை உயர்த்த விஜய் டிவியின் புதிய உத்தியா?

Web Desk | news18
Updated: September 9, 2019, 8:32 PM IST
மதுமிதா பிரஸ் மீட்டின் பின்னணி என்ன? - பிக்பாஸ் டிஆர்பி-யை உயர்த்த விஜய் டிவியின் புதிய உத்தியா?
கமல்ஹாசன் - மதுமிதா
Web Desk | news18
Updated: September 9, 2019, 8:32 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த மதுமிதாவை டிவி நிர்வாகம் பேச வைத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்களான சந்தானம், சூரி உள்ளிட்டோருடன் நடித்துள்ள மதுமிதா. தனது காமெடி காட்சிகளால் புகழ் அடைந்ததை விட, தற்போது பிக் பாஸ் சர்ச்சையில் சிக்கி அதிக ஊடக வெளிச்சத்திற்கு ஆளாகிவருகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு மதுமிதா வெளியாற்றப்பட்டாலும், அவர் அளித்துவரும் பேட்டிகள் பிக்பாஸ் சர்ச்சையை கொழுந்துவிட்டு எரிய வைக்கிறது. இந்த நிலையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா திடீரென பொங்கினார்.


யாரிந்த மதுமிதா?

2002-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமான மதுமிதா, 2004-ம் ஆண்டு குடைக்குள் மழை என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அவரைத் தனித்து அடையாளம் காட்டத் தொடங்கின. தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், இந்த ஆண்டு பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்றார். 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டிய பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

நடிகை மதுமிதா


Loading...

அவர் ஏன் வெளியேற்றப்பட்டார்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் முன்பே, தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை டிவி நிர்வாகம் தரவில்லை என போலீசில் புகாரளித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் டிவி நிர்வாகமும் தங்கள் தரப்பை விளக்கி புகாரளித்தது. இதையடுத்து ஊடகங்களைச் சந்தித்த அவர், தான் வெளியேற்றப்பட்டதற்கு காவிரி பிரச்னை குறித்து தான் பேசியதுதான் காரணம் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுமிதா


இதையடுத்து, மதுமிதாவுக்கு அளிக்க வேண்டிய மீதி சம்பளத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இடையில் சில நாட்கள் அமைதியாக இருந்த மதுமிதா, திங்கட்கிழமை அன்று சம்பந்தப்பட்ட டிவி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டி நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த நிகழ்வு நடந்த இடமே ஒரு பிக்பாஸ் சீக்ரெட் ரூம் போலத்தான் இருந்தது. முதலில் சில ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மதுமிதா பேட்டியின் போது ஏற்பாடு செய்த டிவி நிறுவனத்தையே சாடத் தொடங்கியதால், நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. தனது பேட்டியில் அவர் பிக்பாஸ் வீட்டில் தனக்கு நடந்தது என்ன என்பதை விலாவாரியாக விளக்கினார்.

நடிகை மதுமிதா


தனது ஆதங்கத்தை பிக் பாஸ் வீட்டிலேயே கூறியதாகவும், அதை அங்கிருந்த சக போட்டியாளர்கள் அரசியலாக்கிவிட்டதாகவும் கூறிய மதுமிதா,பிக் பாஸ் வீட்டில் தன்னை சக போட்டியாளர்கள் கேங் ராகிங் செய்ததாகவும், கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதற்கு பிக் பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளர்கள்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பிக்பாஸில் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசுபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் விட மாட்டேன் என சபதமிட்டுள்ள மதுமிதா,பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் நடிகர் கமல்ஹாசனையும் மதுமிதா விட்டு வைக்கவில்லை. வீட்டிற்குள் நடப்பதை முழுமையாக தெரிந்துகொள்ளாமல், கமல் செயல்படுவதாக கடும் குற்றச்சாட்டையும் தனது பேட்டியில் முன்வைத்துள்ளார்.

பணத்திற்காகவும், புகழுக்காவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, திடீரென சமூக அக்கறையாளராக மாறிவிட்டார் என்பதை அவரது பேட்டியில் உணர்ந்துகொள்ள முடிந்தது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, கடந்த 25 நாட்களாக பிக் பாஸ் வீட்டைப்பற்றி தொடர்ந்து பல்வேறு கோணங்களில் மதுமிதா பேட்டி அளிக்க என்ன காரணம்? பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் கூட்டும் யுக்தியாக இருக்கலாம் என்று மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வீடியோ பார்க்க: இருவரைத் தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை - மதுமிதா

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...