மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்...? போலீஸ் விசாரணை தேவை - எஸ்.வி.சேகர்

news18
Updated: August 18, 2019, 6:56 PM IST
மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்...? போலீஸ் விசாரணை தேவை - எஸ்.வி.சேகர்
மதுமிதா | எஸ்.வி.சேகர்
news18
Updated: August 18, 2019, 6:56 PM IST
மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா என்று கேள்வி எழுப்பியிருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர், இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணை தேவை என்றும் கூறியுள்ளார்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வார இறுதியில் சாக்‌ஷி வெளியேற்றப்பட்டதை அடுத்து கஸ்துரி வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
அவரை அடுத்து சிறப்பு விருந்தினராக வீட்டுக்குள் வந்த வனிதா விஜயகுமார் தற்போது டாஸ்க்குகளில் ஈடுபட்டு வருவதால் அவரும் போட்டியாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார்.


பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகையை அடுத்து பல்வேறு பிரச்னைகள் மூண்டன. வீட்டிலிருந்த போட்டியாளர்கள் பல அணிகளாக பிரிந்தனர். வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்வதாகவும், அடிமைப்படுத்துவதாகவும் பொங்கி எழுந்தார் மதுமிதா.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ஹலோ ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை வனிதா விஜயகுமார் வார இறுதியில் மக்களின் ஓட்டைப் பெற ஏன் இப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று கூறியதாகவும், பெரும்பாலான போட்டியாளர்கள் தனக்கு எதிராக திரும்பியதால், தான் கூறிய கருத்தை நிரூபிக்க அவர் தன்னைத்தானே தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Loading...

மதுமிதா தன்னைத் தானே தாக்கிக் கொண்ட சமயத்தில் இதை ஒளிபரப்ப முடியாது என்றும், ஹலோ ஆப்பில் தனது பதிவை மாற்றுமாறும் பிக்பாஸ் மதுவிதாவிடம் வலியுறுத்தியுள்ளார். அதையும் மீறி தனது கருத்தில் உறுதியாக நின்றதால் மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று அறிவித்தார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடையே பேசிய மதுமிதா, “சேரன் மற்றும் கஸ்தூரியைத் தவிர வேறு யாரையும் பார்க்க விரும்பவில்லை” என்றார்.

அப்போது சேரன், “மதுமிதா எடுத்த முடிவை தவறானது என்று சுட்டிக்காட்டினார். கமல்ஹாசனும் உங்களது தியாகம் அகிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

இதுகுறித்து கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா⁉️ ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் நபரை அறிவித்த கமல்!

 வீடியோ பார்க்க: ஷூட்டிங்காக ஜெய்ப்பூருக்கு பறந்த ரஜினி, நயன்தாரா..

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...