கவின் டி-சர்ட்டை அணிந்து வந்த லாஸ்லியா - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கவின் டி-சர்ட்டை அணிந்து வந்த லாஸ்லியா - கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 4, 2019, 5:18 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா கவினுடைய ஆடைகளை அணிந்திருப்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அவர்களைக் கிண்டலடித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தொலைபேசி, இணையம் உள்ளிட்ட எந்தவித வெளியுலகத் தொடர்புமின்றி 100 நாட்கள் ஒரேவீட்டில் தங்கியிருக்க வேண்டும். இந்நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் அதிகம் இடம்பெறுவதால் இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் அதிக கவனம் பெறுகின்றனர்.

முதல் சீசனில் நடிகை ஓவியா பார்வையாளர்களிடம் அதிக கவனம் பெற்றார். மேலும் ஆரவ் - ஓவியா இடையே மலர்ந்த காதல் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் இரண்டாவது சீசனில் நடிகர் மஹத் - யாஷிகா ஆனந்த் காதல் பேசுபொருளானது. இதனால் மஹத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா பிரேக் அப் செய்யும் அளவுக்குச் சென்றார். ஆனால் இப்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் முடிவாகியுள்ளது.


தற்போது 3-வது சீசனில் லாஸ்லியா - கவின் காதல் பறவைகளாக வலம் வருகின்றனர். ஆரம்பத்தில் அபிராமி, கவின் தன்னை மிகவும் ஈர்த்ததாக கூறினார். பின்னர் சாக்‌ஷியிடம் நெருக்கம் காட்டிய கவின் ஒருகட்டத்தில் அவரைப் பிரிந்தார். இதையடுத்து தற்போது லாஸ்லியாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் மைக்கை ஆஃப் செய்துவிட்டு இரவில் பேசியதைச் சுட்டிக்காட்டி கண்டித்தார் கமல்ஹாசன். பார்வையாளர்களும் கவின் - லாஸ்லியா காதலை அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்குப் பின்னர் காதல் குறித்து பேசிக்கொள்ளலாம் என்று கவின் - லாஸ்லியா இருவரும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.Loading...

இந்நிலையில் லாஸ்லியா கவினின் டி-சர்ட்டை தொடர்ந்து அணிந்து வருவது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனியாக அமைந்துள்ளது. இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும் லாஸ்லியா, கவின் அணிந்த ‘கேம் ஆன்’ டி-சர்ட்டை அணிந்துள்ளார். இதை சமூகவலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வீடியோ பார்க்க: நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, ஒரு கோடி ரூபாய் பறித்த பெண்

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...