”இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்!

”இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை” காதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்!
சேரன் | லாஸ்லியா
  • News18
  • Last Updated: August 22, 2019, 12:53 PM IST
  • Share this:
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த வார இறுதியில் மதுமிதா, அபிராமி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மீண்டும் கவின் - லாஸ்லியா இருவரும் நெருக்கமாகியுள்ளனர். சாண்டி, கவின், லாஸ்லியா, முகென், அபிராமி ஆகியோர் கூட்டணி அமைத்து சேரனை வெளியேற்ற நாமினேஷன் செய்தனர். அதனால் இந்த வார எவிக்‌ஷனில் இயக்குநர் சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார் என்பது இந்த வார இறுதியில் தெரிய வரும்.

ஆரம்பத்தில் சேரனிடம் அப்பா உறவுமுறை பாராட்டி வந்த லாஸ்லியா தற்போது சேரனை ஓரங்கட்டி விட்டார். நேற்ரைய நிகழ்ச்சியில் கவினுடன் அமர்ந்து பேசிய லாஸ்லியா கவின் அடித்த கமெண்டுக்கு வெட்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கவினை எனக்கு ஆரம்பத்தில் பிடிக்கும் இப்போது ரொம்ப பிடிக்கும். இது கவினுக்கே தெரியும் என்று கூறும் லாஸ்லியா அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இரண்டாவது வீடியோவில் லாஸ்லியாவும், சேரனும் தனியே அமர்ந்து பேசுகின்றனர். அப்போது தப்போ சரியோ எனக்கு நிறைய விஷயங்களில் கவின் ஆதரவாக நின்றுள்ளார் என்று சேரனிடம் கூறுகிறார் லாஸ்லியா.

படிக்க: மதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்!இதையடுத்து, நீ முன்பை விட இப்போது அதிகமாக கவினுடன் நெருக்கமாக இருக்க என்று லாஸ்லியாவிடம் சேரன் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் லாஸ்லியா, கவினை எனக்கு முதலில் பிடித்த மாதிரி, இப்போது ரொம்ப பிடிச்சிருக்கு. கவினும் உண்மையாக என்னை பிடித்திருப்பதாக கூறுகிறான்.

இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது எனக்கு தேவையே இல்லை. எனக்கு ஆதரவாக கவின் இருக்கும் போது நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். இதை அடுத்தகட்டதுக்கு கொண்டு போவதை வெளியில் சென்ற பின் தான் பார்க்க வேண்டும் என்கிறார்.

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்