சாக்‌ஷி முன் அமர்ந்து மன்னிப்பு கேட்ட லாஸ்லியா... சமாதானப்படுத்திய கவின்!

சாக்‌ஷி முன் அமர்ந்து மன்னிப்பு கேட்ட லாஸ்லியா... சமாதானப்படுத்திய கவின்!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 4, 2019, 12:53 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் சாக்‌ஷி வருகையை அடுத்து மீண்டும் கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் புகையத் தொடங்கியுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் ஷெரின், கவின், லாஸ்லியா, முகென், சேரன் ஆகிய 5 பேர் இந்த வாரம் வெளியேற்றப்படும் பட்டியலில் உள்ளனர். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் மீண்டும் வீட்டுக்குள் விருந்தாளிகளாக நுழைந்துள்ளனர். கவின் - லாஸ்லியா காதல் விவகாரத்தை வனிதா கையிலெடுத்திருக்கும் நிலையில் சாக்‌ஷி வீட்டுக்குள் விருந்தாளியாக வந்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடு தலையணை தொழிற்சாலையாக மாறியிருந்தது. அப்போது வனிதா, கவின், லாஸ்லியா ஆகிய  மூவருக்கிடையே பிரச்னை எழுந்தது. அந்த பிரச்னையை அப்படியே நிறுத்தி வைத்த பிக்பாஸ், சாக்‌ஷி, அபிராமி, மோகனை உள்ளே அழைத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் பேசினர்.

லாஸ்லியாவிடம் பேசிய அபிராமி, நீ முன்பிருந்தது போல் இப்போது இல்லை என்று கூறினார். அதேசமயம் சாக்‌ஷியைப் பார்த்த ஷெரின் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து மீண்டும் அபிராமி, சாக்‌ஷி, ஷெரின் மூவர் கூட்டணி இணைந்து பாப்பா பாடும் பாட்டு பாடலைப் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் சாக்‌ஷி கவினிடமோ, லாஸ்லியாவிடமோ எதுவுமே பேசவில்லை.

இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முதல் வீடியோவில், உங்களுடன் என் ஜாய் பண்ண வந்திருக்கிறேன் என்று அபிராமி சாண்டியிடம் கூறுகிறார். அதற்கு பதிலளித்த சாண்டி மற்றும் கவின், நீ மட்டும் தான் அப்படி வந்திருக்க, நைனா மற்றும் சாக்‌ஷி பழிவாங்க வந்திருக்கிறாங்க என்கிறார்கள்.

Loading...

இரண்டாவது புரமோவில், மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நடுவர்களாக அமர்ந்துள்ளனர். இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்துள்ளனர். அப்போது லாஸ்லியா மன்னிப்பு கேட்பதால் இவர்கள் எல்லாம் நல்லவர்களாக மாறிடமாட்டாங்க என்கிறார். அதற்கு பதிலளிக்கும் வனிதா, யார் நல்லவங்க என்று கேள்வி எழுப்புகிறார். இடைமறித்த ஷெரின் லாஸ்லியாவின் திமிரு பிடித்த நடவடிக்கைகள் என் மனதை மிகவும் புண்படுத்தியது என்கிறார். இதை அமைதியாக கேட்கிறார் சாக்‌ஷி.

இதையடுத்து கவினிடம் பேசும் லாஸ்லியா, அவர்கள் பெர்ஷனல் விஷயங்களைப் பேசியதால் தான் நான் அப்படிப் பேசினேன் என்கிறார். சமாதானப்படுத்தும் கவின், உனக்கு ஒன்னு தெரியுமா இல்லையா, ஒட்டு மொத்த உலகத்திலேயே அவர்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம் என்கிறார்.வீடியோ பார்க்க: அஜித்குமாருக்கு ரசிகர்கள் வழங்கிய அடைமொழிகள்

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...