பிக்பாஸ்: 4 பெண்களை யூஸ் பண்றீங்க... மதுமிதா - லாஸ்லியா ஆபரேஷன் ஆரம்பம்!

Bigg Boss Tamil 3 | "முகேனின் காதலி குறித்து அபிராமியிடம் பேசிய வனிதா, நேர்கொண்ட பார்வை படத்தை சுட்டிக்காட்டி அறிவுறையும் வழங்கினார்"

பிக்பாஸ்: 4 பெண்களை யூஸ் பண்றீங்க... மதுமிதா - லாஸ்லியா ஆபரேஷன் ஆரம்பம்!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: August 14, 2019, 2:03 PM IST
  • Share this:
வனிதா வருகையை அடுத்து பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னைகள் எழத் தொடங்கியுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடப்பது வழக்கம். இந்தமுறை இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ளது. விருந்தாளியாக என்ட்ரி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருப்பதால் போட்டியாளர்களை தனது கேள்விகளால் துளைத்தெடுத்தார்.


மேலும் முகேனின் காதலி குறித்து அபிராமியிடம் பேசிய வனிதா, நேர்கொண்ட பார்வை படத்தை சுட்டிக்காட்டி அறிவுறையும் வழங்கினார். இதையடுத்து இருவரும் மோதிக்கொள்ளும் சூழலும் ஏற்பட்டது. வனிதாவின் வருகையை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் சற்றே குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மதுமிதா, லாஸ்லியா கவின் ஆப்ரேஷனை வனிதா கையிலெடுத்திருப்பதாக தெரிகிறது. அதற்கான புரமோஷன் வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் 4 பெண்களை நீங்கள் யூஸ் பண்ணுறீங்க என்று கவினிடம் மதுமிதா கூறுகிறார். அதற்கு அந்த நால்வரில் என்னுடைய பெயரும் உள்ளது என்று லாஸ்லியா கோபப்படுகிறார். எனவே இன்றைய நிகழ்ச்சியிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்