என்னால இங்க இருக்க முடியாது... கவின் கையைப் பிடித்து கதறி அழும் லாஸ்லியா!

என்னால இங்க இருக்க முடியாது... கவின் கையைப் பிடித்து கதறி அழும் லாஸ்லியா!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 26, 2019, 2:57 PM IST
  • Share this:
கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது லாஸ்லியாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தொலைத்தொடர்பு, இணையம் உள்ளிட்ட எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.

முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் 3-வது சீசனில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் முகென் ராவ் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் 5 பேரும் எவிக்‌ஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் ரூ.5 லட்சம் பணம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை உள்ளே அனுப்பிய பிக்பாஸ், நிகழ்ச்சியில் உள்ள ஒரு போட்டியாளர் மட்டுமே ரூ.50 லட்சத்தைப் பெற்ற வின்னராக முடியும் என்றும், இந்த ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு யார் வெளியே செல்கிறீர்கள் என்றும் போட்டியாளர்களிடம் கேட்டார்.

அனைவரும் அமைதி காக்க, கவின் எழுந்து தான் வெளியே செல்வதாக சம்மதம் தெரிவித்தார். கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது சாண்டி மற்றும் லாஸ்லியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தநிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், கவின் தனது சூட்கேஸுடன் வெளியேற லாஸ்லியா கண்ணீர் வடிக்கிறார். அவருடன் ஒரு புகைப்படத்தைக் கொடுத்த கவின், போட்டியை சிறப்பாக வெளியிடுமாறு அறிவுறுத்துகிறார்.

மேலும் படிக்க: கண்ணீரையும் தாண்டி... கவின் - லாஸ்லியாவின் கடைசி மொமெண்ட்! - வெளிவராத வீடியோ

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading