’நான் 3 வருஷம் ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன்...’ லாஸ்லியாவிடம் உண்மையை உடைத்த கவின்..

’நான் 3 வருஷம் ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன்...’ லாஸ்லியாவிடம் உண்மையை உடைத்த கவின்..
கவின் - லாஸ்லியா
  • News18
  • Last Updated: August 28, 2019, 4:29 PM IST
  • Share this:
தனது முன்னாள் காதல் குறித்து லாஸ்லியாவிடம் மனம் திறந்துள்ளார் கவின்.

65 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியா இடையேயான காதல் ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கவின், வீட்டின் காதல் மன்னனானார். ஒரு கட்டத்தில் சாக்‌ஷியிடம் நெருக்கம் காட்டி வந்த கவின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கமல்ஹாசனும் கவின் விவகாரத்தில் அவ்வப்போது கண்டித்து வந்தார்.

சாக்‌ஷி வெளியேற்றப்பட்ட பின்னர் லாஸ்லியா - கவின் இருவரும் நெருக்கமாகினர். இந்தவாரத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் இருவரது உறவு குறித்து வனிதா, கவினிடம் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த கவின், “தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இருவரும் பழகி வருவதாகவும், தங்களுடைய உறவு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க பிக்பாஸ் சரியான இடமாக இருக்காது என்றும் கூறியிருந்தார்.


இந்நிலையில் தற்போது நிகழ்ச்சிக்குழு புரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கவின் லாஸ்லியா இடையேயான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
அந்த உரையாடலில் கவின் லாஸ்லியாவிடம் நான் 3 வருஷமா ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன். ஆனால் அவள் எல்லாம் முடிந்துவிட்டதாக ஒரு மெசேஜ் அனுப்பி முடிச்சிட்டா. அதோட தான் பிக்பாஸ் உள்ள வந்தேன். இனி நீ தான் முடிவு பண்ணனும் என்கிறார்.Loading...

முன்னதாக சாக்‌ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை சாக்‌ஷி, கவினிடம் 3 கேள்விகள் கேட்க விரும்புகிறேன். ஒன்று முதலில் யார் யாரை புரபோஸ் செய்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் கவினிடம் புரபோஸ் செய்தேனா அல்லது அவர் என்னிடம் காதலை சொன்னாரா என்பது பார்வையாளர்களுக்கு முழுவதுமாக தெரியுமா? என்று தெரியவில்லை.

பாத்ரூமில் கவின் என்னை சாவடிச்சுடுவேன் என்று கத்தி பேசினார். என்னிடம் காண்பித்த இந்த கோபத்தை வனிதா உட்பட வேறு யாரிடமாவது கவினால் காண்பிக்க முடியுமா? அந்த அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுக்கக் காரணம் என்ன?அடுத்ததாக கல்யாண விஷயத்தில் எனக்கு தேவையான நான்கு காரணங்களில் நீ வந்துவிட்டாய், எனவே நீ எனக்கு பொருத்தமானவர் என்று கவின் தான் என்னிடம் கூறினார். ஷெரினிடம் அவர் பேசும்போது கூட இனிமேல் சாக்‌ஷி என்னுடைய வீட்டில் தான் இருப்பார். நீ சாக்‌ஷியைப் பார்க்க வேண்டும் என்றால் எங்கள் வீட்டுக்கு தான் வர வேண்டும் என்று கூறி திருமணம் வரைக்கும் எடுத்துச் சென்றது கவின் தான்.

ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைக்காமல் நான் கேம் விளையாடியதாக என் மேல் பழி போடுவது ஏன்?
பலமுறை கவின் மற்றும் லாஸ்லியாவிடம் இந்த பிரச்னை குறித்து நாம் மூவரும் அமர்ந்து பேசலாம் என்று கூறினேன். ஆனால் ஒருமுறை கூட இருவரும் என்னிடம் வந்து பேசவில்லை. ஜெயிலில் இருக்கும் போது நான் அனைத்தையும் லாஸ்லியாவிடம் சொல்லி விட்டேன். ஆனால் லாஸ்லியா அதை கண்டுகொள்ளவில்லை.

கவின் உன்னால் எப்படி சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ள முடிகிறது. பெண்களான எங்களால் அப்படி ஒருபோதும் மாற்ற முடியாது. உன்னுடைய செயல் மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது... மீரா மிதுன் அதிரடி

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...