பிக்பாஸ்: லாஸ்லியாவுக்காக சாண்டியை எதிர்க்கும் கவின்!

பிக்பாஸ்: லாஸ்லியாவுக்காக சாண்டியை எதிர்க்கும் கவின்!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 10, 2019, 1:55 PM IST
  • Share this:
இந்த வாரம் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வாகியுள்ள நிலையில் அவரது தலைமை எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் தலைமை ஏற்று வீட்டை வழிநடத்த வேண்டும். கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வீட்டின் தலைவராக இருந்த நிலையில் இந்த வாரம் லாஸ்லியா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்களை சுத்தம் செய்வது, சமையல் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு ஒவ்வொரு அணிகளாக பிரிந்து வேலை செய்து வந்த பிக்பாஸ் வீட்டில், எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று வீட்டின் தலைவர் லாஸ்லியா நேற்று கட்டளையிட்டார்.


இதையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. முதலாவது வீடியோவில், முகென் குடும்பத்தார் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெறும் என்பது தெரிய வந்துள்ளது.

இரண்டாவது புரமோ வீடியோவில், லாஸ்லியா, கவின், முகென், சாண்டி, தர்ஷன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர். அப்போது காபி குடித்து முடித்தவர்கள் வேலை செய்ய வாருங்கள் என்று லாஸ்லியா கூறுகிறார்.

இதற்கு பதிலளிக்கும் சாண்டி, நீங்கள் வீட்டின் தலைவரானதும் வேலை செய்ய கூப்பிடுகிறீர்கள். இதற்கு முன் நீங்கள் இப்படி இருந்ததில்லையே என்கிறார். உடனே நான் எனது வேலைகளை சரியாகத் தான் செய்து வருகிறேன் என்கிறார் லாஸ்லியா.புகைப்படங்களைப் பார்க்க கிளிக் செய்யவும் - ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை வெளியிட்ட புகைப்பட கலைஞர்!

இதையடுத்து அந்த இடத்திலிருந்து கோபமாக எழும் லாஸ்லியா, நீங்கள் வரத்தேவையில்லை சாண்டி என்று கூறி அங்கிருந்து கிளம்புகிறார். இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டாரா லாஸ்லியா என்று கவினிடம் சாண்டி, முகென் ஆகியோர் கேட்க, காமெடி காமெடி என்று சொல்லி நீ மனசை காயப்படுத்திட்ட என்று பதிலளிக்கிறார் கவின்.

கவின் இப்படி பேசியதை அடுத்து சாண்டி அப்செட்டாகிறார். லாஸ்லியா தலைவராக இருக்கும் இந்த வாரத்தில் கவின் - சாண்டி நட்பில் விரிசல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.வீடியோ பார்க்க: கதை அமைந்தால் அஜித் போல நடிப்பேன்: ஜி.வி. பிரகாஷ்

First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading