லாஸ்லியாவின் அப்பா வருகையால் வெளியேறினாரா கவின்?

லாஸ்லியாவின் அப்பா வருகையால் வெளியேறினாரா கவின்?
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 11, 2019, 3:19 PM IST
  • Share this:
10 வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையை சந்தித்துள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொருமுறையும் பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்வது வாடிக்கையாகி வரும் நிலையில் இம்முறை பிக்பாஸ் வீட்டின் மன்மதன் டைட்டிலை கவின் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் சாக்‌ஷியிடம் நெருங்கிப் பழகி வந்த கவின், தன்னைப் பயன்படுத்துவதாகக் காரணம் கூறி சாக்‌ஷியை விட்டு விலகினார். பின்னர் லாஸ்லியாவிடம் நெருக்கமாகப் பழகி வரும் கவின், பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பு தான் 3 வருடங்களாக ஒரு ரிலேசன்ஷிப்பில் இருந்ததாக வெளிப்படையாக கூறினார்.


ஒருகட்டத்தில் கவின் - லாஸ்லியா இருவரும் மைக்கை ஆஃப் செய்து விட்டு நள்ளிரவு நேரத்தில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த கமல்ஹாசன் குறும்படம் போட்டுக் காட்டினார். இதைத் தொடர்ந்து லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சாண்டி, சேரன் உள்ளிட்டோர் அறிவுரை வழங்கினர். இருந்தபோதிலும் தனது கடந்த காலத்தை லாஸ்லியாவிடம் தெரிவித்த கவின் அவரது சம்மதத்துக்காக காத்திருக்கிறார். எனவே இவர்களது காதல் பார்வையாளர்கள் மத்தியிலும் போரடித்துவிட்டது.

பார்க்க: ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை வெளியிட்ட புகைப்பட கலைஞர்!

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு தனது மகளைப் பார்க்க வந்துள்ளார் லாஸ்லியாவின் தந்தை. 10 வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையை சந்திக்கும் லாஸ்லியா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இதையடுத்து வெளியான வீடியோவில், லாஸ்லியாவைப் பார்த்து கேள்வி கேட்கும் அவரது தந்தை, "உன்னை அப்படிதான் வளர்த்தேனா. என்ன சொல்லிவிட்டு உள்ளே வந்த. நான் இதைப் பேசக்கூடாது என்று நினைத்தேன்" என்று அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் கூறுகிறார்.அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் சேரன் ஈடுபட தொடர்ந்து பேசிய லாஸ்லியாவின் அப்பா, "மற்றவர்கள் என்னை காறித் துப்புவதற்காகவா என்னைப் பார்க்கிறாய்” என்கிறார். இதையடுத்து சேரன் லாஸ்லியாவின் தந்தையை பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். இவை அனைத்தையும் பார்க்கும் கவின் விழிபிதுங்கி நிற்கிறார்.கவினுடனான காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. இதை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் காஜல் பசுபதியிடம் கேள்வியாக முன் வைத்துள்ளனர் கவின் ஆர்மியினர். கேள்விக்கு பதிலளித்த காஜல், கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறவில்லை என்றும், இது வெறும் வதந்திதான் என்றும் கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: அபராதத்தை குறைத்து அமல்படுத்த தமிழக அரசு முடிவு

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்