கம்பி எண்ணும் கஸ்தூரி... கண்ணீரில் கவின் - பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்குது?

கம்பி எண்ணும் கஸ்தூரி... கண்ணீரில் கவின் - பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்குது?
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: August 14, 2019, 5:32 PM IST
  • Share this:
வனிதா வருகையை அடுத்து பிக்பாஸ் வீட்டை சோகமும், பிரச்னைகளும் சூழ்ந்துள்ளன.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் கஸ்தூரி வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்ததை அடுத்து வனிதா விஜயகுமாரும் வீட்டுக்குள் நுழைந்தார்.

வனிதா வருகைக்கு முன்னதாக காதல், காமெடி என்றிருந்த பிக்பாஸ் வீடு, வனிதா வருகைக்குப் பின் முழுக்க சண்டை, கண்ணீர், சோகமாக மாறியுள்ளது.


இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோஷன் வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு புரமோவில் 4 பெண்களை நீங்கள் யூஸ் பண்ணுறீங்க என்று கவினிடம் மதுமிதா கூறுகிறார். அதற்கு அந்த நால்வரில் என்னுடைய பெயரும் உள்ளது என்று லாஸ்லியா கோபப்படுகிறார்.சற்றுமுன் வெளியான மூன்றாவது புரமோவில், கவிண் கண்ணீர் வடித்துக் கொண்டு ஒரு வார்த்தை பேசியதில் அடிமைத்தனம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்கிறார். அவருக்கு சகபோட்டியாளரான சாண்டி ஆறுதல் கூறுகிறார்.மேலும் பேசிய சாண்டி, மதுமிதாவுக்கு அடிபட்டு விடும் என்பதற்காக கேப்டன் டாஸ்க்கில் நாங்கள் விட்டுக் கொடுத்தோம். அப்போதெல்ல்லாம் தெரியாத அடிமைத்தனம் இப்போது எப்படி வந்தது என்றும் கேள்வி எழுப்புகிறார். இவை அனைத்தையும் ஜெயிலில் இருந்தபடி கவனித்து வருகிறார் கஸ்தூரி.

வனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஓரிரு நாட்களிலேயே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் கஸ்தூரி. அவருக்கு ஏன் இந்த தண்டனை கொடுக்கப்பட்டது என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

வீடியோ பார்க்க: கேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்!

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்