பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் - சாக்‌ஷிக்கு தண்டனை!

Web Desk | news18
Updated: August 8, 2019, 5:17 PM IST
பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் - சாக்‌ஷிக்கு தண்டனை!
பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரி
Web Desk | news18
Updated: August 8, 2019, 5:17 PM IST
பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் நடிகை கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டுள்ளது.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 47 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியிலிருந்து தற்போதுவரை வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, ரேஷ்மா, பாத்திமா பாபு ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் நுழைந்துள்ளார். அதற்கான புரமோஷன் வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், அவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டதாக சக போட்டியாளர்கள் மத்தியில் அறிவிக்கிறார் நடிகை கஸ்தூரி.


மேலும் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் ஜெயில் தண்டனை இல்லை என்றும் கஸ்தூரி அறிவிப்பு வெளியிடுகிறார். இதனால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தனக்குள்ள ஸ்பெஷல் பவரை வைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தண்டனை கொடுக்கும் கஸ்தூரி, சாக்‌ஷியை தலைகீழாக நிற்க வேண்டும் என்று கூறுகிறார்.

கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருப்பதையடுத்து வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...