பிக்பாஸ்க்கு குட் பை சொல்கிறாரா கமல்... சிம்புவுக்கு வாய்ப்பு?

பிக்பாஸ்க்கு குட் பை சொல்கிறாரா கமல்... சிம்புவுக்கு வாய்ப்பு?
கமல்ஹாசன் | சிம்பு
  • Share this:
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியோடு கமல்ஹாசன் விலக இருப்பதாகவும், அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையிலிருந்த கமல்ஹாசன் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதனால் இந்த நிகழ்ச்சிக்கும் அது விளம்பரமாக மாறிப்போனது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கக் கூடாது என்றெல்லாம் கூட எதிர்ப்புகள் எழுந்தன.

ஆனால் இரண்டாவது சீசனையும் தானே தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், தற்போது 3-வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தன்னை இணைத்துக் கொண்ட பிறகு மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் ட்விட்டர் வாயிலாக அரசியல் பேசிவந்த கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசினார்.


போட்டியாளர்கள் மக்களிடையே பிரபலமாக இந்த நிகழ்ச்சியை பயன்படுத்துவது போல் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்துக்காக இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம். இதனிடையே தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை சூர்யா அல்லது மாதவன் தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதைப் பொய்யாக்கினார் கமல்ஹாசன். மேலும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

கடந்த இரண்டு சீசன்களைப் போல் இல்லாமல் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியை அதிக சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன என்றே கூறலாம்.

சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதாவின் தற்கொலை முயற்சி, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வனிதாவை போலீசார் விசாரித்த விவகாரம் என தொடர் சர்ச்சைகளில் நிகழ்ச்சி சிக்கியிருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கமாட்டார் என்று இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

Loading...

இதையும் படிங்க: சிக்ஸர் படக்குழுவுக்கு கவுண்டமணி நோட்டீஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கும் போது சட்டமன்ற தேர்தல் வருவதால் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது கேள்விக்குறிதான் என்றும் காரணம் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாவது சீசனே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த சீசனை சிம்புதான் தொகுத்து வழங்குவார் என்று சிலர் வதந்தி பரப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க நடிகர் சிம்பு விஜய் டிவி நிர்வாகத்துக்கு மிகவும் நெருங்கியவர் என்பதும், கடந்த சீசனில் சிம்பு சொல்லியதால் தான் நடிகர் மஹத்துக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தவார இறுதியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றும் கமல்ஹாசன், இதுகுறித்து பேசினால் மட்டுமே இதற்கு சரியான விடை கிடைக்கும்.

வீடியோ பார்க்க: பிகினியில் அசத்தும் சமந்தா, த்ரிஷா, ரகுல் ப்ரீத் சிங்

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...