சேரனா... கவினா யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்? - லாஸ்லியாவின் பதில்

சேரனா... கவினா யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்? - லாஸ்லியாவின் பதில்
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 22, 2019, 11:39 AM IST
  • Share this:
யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் லாஸ்லியா.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். இவர்களில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்துள்ள வாக்குகளின் அடிப்படையில் இன்று வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஷெரின் காப்பாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. மீதமிருக்கும் லாஸ்லியா, கவின், சேரன் ஆகியோர் அருகருகே அமர்ந்திருக்க, கமல்ஹாசன் லாஸ்லியாவிடம் யாரைக் காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.


அதற்கு பதிலளித்துள்ள லாஸ்லியா, இருவரையும் காப்பாற்ற நினைப்பதாக கூறுகிறார். மற்ற போட்டியாளர்கள் சிரித்தபடி கமலைப் பார்க்க, என்னை இங்கே சொல்ல சொன்னது யாரைக் காப்பாற்றுகிறீர்கள் என்பதுதான். ஆனால் நான் தான் வாயை வைத்து சும்மா இல்லாமல் இவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறேன் என்று நகைச்சுவை செய்கிறார் கமல்ஹாசன்.

இன்று வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருக்கும் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோரில் வழக்கம்போல் கவின் அதிக ஓட்டுக்களைப் பெற்றுள்ளதாகவும், ஷெரின் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் சேரனை வெளியேற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.Loading...

வீடியோ பார்க்க: நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...