பிக்பாஸில் திடீர் திருப்பம்...! சேரனுடன் லாஸ்லியாவும் வெளியேறுகிறாரா? - வெளியானது புதிய வீடியோ

பிக்பாஸில் திடீர் திருப்பம்...! சேரனுடன் லாஸ்லியாவும் வெளியேறுகிறாரா? - வெளியானது புதிய வீடியோ
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 22, 2019, 3:43 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்சியிலிருந்து ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேற்றப்படும் நிலையில் இந்தமுறை சேரன் மற்றும் லாஸ்லியாவை அழைத்துள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் கடந்தவாரம் நடந்த டாஸ்க்குகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் முகென் ராவ்.

இதுஒருபுறமிருக்க இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இன்று வெளியேற்றப்படுவார்.


நாமினேஷனில் இருக்கும் நால்வரில் கவினுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், ஷெரினுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்தவாரம் நடந்த டாஸ்க்குகளில் சேரனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை இன்று வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான 3-வது புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சேரனையும், லாஸ்லியாவையும் அழைக்கும் கமல்ஹாசன், லாஸ்லியா நீங்கள் ஆசைப்பட்டது மாதிரி நீங்களும் சேரனும் பிரியா விடை பெற்றுக் கொண்டு பிக்பாஸ் சொல்லும் ரூமுக்கு இருவரும் வாங்க” என்கிறார்.

இதையடுத்து சேரன் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெறுகிறார். லாஸ்லியா தனது பொருட்களை பேக் செய்து கொண்டிருக்கையில் இப்போதாவது நான் சொல்வதைக் கேள் என்கிறார் கவின். ஆனால் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கவினிடம் கூறுகிறார் லாஸ்லியா. இத்துடன் அந்த புரமோ வீடியோ முடிவடைகிறது.இதனால் லாஸ்லியாவும் சேரனுடன் வெளியேற்றப்படுகிறாரா என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் சேரன் மட்டுமே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.வீடியோ பார்க்க: தமிழகத்தில் பாஜக ஆள நினைப்பது விபரீத முடிவு - ராஜேந்திர பாலாஜி

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்