பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் நபரை அறிவித்த கமல்!

”பட்டியலில் இருக்கும் அபிராமிக்கு மட்டும் குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிகிறது”

news18
Updated: August 18, 2019, 12:37 PM IST
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் நபரை அறிவித்த கமல்!
கமல்ஹாசன்
news18
Updated: August 18, 2019, 12:37 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா வெளியேறியதை அடுத்து இன்று வெளியேற்றப்பட இருக்கும் நபரை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் நாமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்களில் ஒரு போட்டியாளரை மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவது வழக்கம்.

இந்த வாரத்தில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அபிராமி வெளியேறியதால் எவிக்‌ஷன் இருக்காது என நினைக்க வேண்டாம் என்று நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறினார்.


இந்நிலையில் இன்று யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மதுமிதாவைத் தவிர்த்து இன்று வெளியேற்றப்படும் நபர்களில் கவின், லாஸ்லியா, அபிராமி, முகென் ஆகியோர் உள்ளனர்.

இந்த நால்வரில் முகென் - அபிராமி இடையே ஏற்பட்ட பிரச்னையில் முகெனுக்கு அதிக அனுதாப வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், முகெனைத் தொடர்ந்து லாஸ்லியாவும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவின் விவகாரத்தில் கடந்த சில வாரங்களில் அவர் தன் தவறை உணர்ந்து விளையாடி வருவதாலும், சாண்டியுடன் இணைந்து காமெடி செய்து பார்வையாளர்களை கவர்ந்து வருவதாலும் அவரை மக்கள் வெளியேற்ற நினைக்கமாட்டார்கள் எனவும் தெரிகிறது.

Loading...

பட்டியலில் இருக்கும் அபிராமிக்கு மட்டும் குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிகிறது. எனவே அவர் இன்று வெளியேற்றப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இன்று ஒருவர் வெளியேற்றப்பட இருக்கிறார் என்பதை கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...