சேரனுக்காக அழுத லாஸ்லியா, வனிதா - கிண்டலடித்த காயத்ரி ரகுராம்!

news18
Updated: September 9, 2019, 6:26 PM IST
சேரனுக்காக அழுத லாஸ்லியா, வனிதா - கிண்டலடித்த காயத்ரி ரகுராம்!
காயத்திரி ரகுராம் | லாஸ்லியா
news18
Updated: September 9, 2019, 6:26 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் ரகசிய அறைக்கு அனுப்பப்படுவதை அறியாத லாஸ்லியா, வனிதா ஆகியோர் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக நினைத்து கன்ணீர் விட்டனர். அதை கிண்டலடித்துள்ளார் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான காயத்ரி ரகுராம்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் சேரன் மட்டும் ரகசிய அறையில் உள்ளார். ஆனால் இதுமற்ற போட்டியாளர்களுக்கு தெரியாது.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சேரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதை அறிந்த போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனது தந்தையாக கருதிய சேரன் வெளியேறுவதை அறிந்த லாஸ்லியா கண்ணீர் விட்டார்.


அதேவேளையில் வனிதாவும் சேரனுக்காக அழுதது பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து சமூகவலைதளங்களில் நகைச்சுவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், கண்ணீர் வராமல் அழுவது எப்படி என்பதை நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சத்தமும், ஆக்‌ஷனும் இருந்ததே தவிர கண்ணீர் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்த பதிவு வனிதாவைக் குறிப்பதாகவும், லாஸ்லியாவைக் குறிப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

Loading...
பார்க்க கிளிக் செய்க: ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை வெளியிட்ட புகைப்பட கலைஞர்!

Video: CINEMA ROUNDUP | மீண்டும் கைகோர்க்கும் சூர்யா - கெளதம் மேனன்

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...