வனிதா வெளியேற்றப்பட மாட்டார் - காரணத்தைக் கூறும் பாத்திமா பாபு!

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் நடவடிக்கை காரணமாக அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

news18
Updated: July 9, 2019, 3:04 PM IST
வனிதா வெளியேற்றப்பட மாட்டார் - காரணத்தைக் கூறும் பாத்திமா பாபு!
பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார்
news18
Updated: July 9, 2019, 3:04 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்பட மாட்டார் என்று பாத்திமா பாபு கூறியுள்ளார்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்ற பாத்திமா பாபு குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்தில் வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் நடவடிக்கை காரணமாக அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வனிதா வெளியேற்றப்படுவது குறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் பாத்திமா பாபு, “ வனிதா வெளியேற்றப்படுவார் என நினைக்கவில்லை. அவரை மக்களுக்கு பிடிக்காவிட்டாலும் வெளியேற்றப்பட மாட்டார். அவர் நிகழ்ச்சிக்குத் தேவையான விஷயங்களை வழங்குகிறார். அவர் இல்லாத பிக்பாஸ் சுவாரஸ்யமில்லாமல் போய் விடும். இறுதிச்சுற்று வரை அவர் வரமாட்டார். ஆதனால் சிறிதுகாலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீடிப்பார்” என்று கூறியுள்ளார்.

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...