உன்ன அப்படியா வளர்த்தேன்... லாஸ்லியாவின் காதலுக்கு கடும் எதிர்ப்பு காட்டும் தந்தை - லீக்கான வீடியோ

உன்ன அப்படியா வளர்த்தேன்... லாஸ்லியாவின் காதலுக்கு கடும் எதிர்ப்பு காட்டும் தந்தை - லீக்கான வீடியோ
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 11, 2019, 3:00 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை கவினுடனான காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் கவின், ஷெரின், வனிதா, தர்ஷன், சாண்டி ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.


இதுஒருபுறமிருக்க இறுதிக்கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அவர்களை சந்திக்கின்றனர். நேற்று முகெனின் தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர்.

இன்று லாஸ்லியாவின் தந்தை வருகை தந்துள்ளார். 10 வருடங்கள் கழித்து தந்தையைப் பார்க்கும் லாஸ்லியா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். பின்னணியில் தங்க மீன்கள் படத்தின் ஆனந்த யாழ் பாடல் ஒலிக்கிறது. இதை புரமோ வீடியோவாக நிகழ்ச்சிக்குழு வெளியிட்டிருந்தது.

தந்தையுடன் பிக்பாஸ் லாஸ்லியா
இந்நிலையில் தற்போது வெளிவராத வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியாவைப் பார்த்து கேள்வி கேட்கும் அவரது தந்தை, "உன்னை அப்படிதான் வளர்த்தேனா. என்ன சொல்லிவிட்டு உள்ளே வந்தே. நான் இதைப் பேசக்கூடாது என்று நினைத்தேன்" என்று அனைத்து போட்டியாளர்கள் மத்தியிலும் கூறுகிறார்.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் சேரன் ஈடுபடுகிறார். தொடர்ந்து பேசிய லாஸ்லியாவின் அப்பா, "மற்றவர்கள் என்னை காறித் துப்புவதற்காகவா என்னைப் பார்க்கிறாய்” என்கிறார். இதையடுத்து சேரன் லாஸ்லியாவின் தந்தையை பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். இவை அனைத்தையும் பார்க்கும் கவின் விழிபிதுங்கி நிற்கிறார்.

மேலும் லாஸ்லியாவுடன் அவரது தங்கையும் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளார். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.வீடியோ பார்க்க: மூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவனுக்கு தர்ம அடி!

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்