உனக்குத் தான் அந்த காதல் கடிதம்... தர்ஷனிடம் மனம் திறந்த ஷெரின்!

உனக்குத் தான் அந்த காதல் கடிதம்... தர்ஷனிடம் மனம் திறந்த ஷெரின்!
தர்ஷன் | ஷெரின்
  • News18
  • Last Updated: September 25, 2019, 12:11 PM IST
  • Share this:
டாஸ்க்கின் போது ஷெரின் யாருக்கு காதல் கடிதம் எழுதினார் என்பது தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முகென் ராவ் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மீதமிருக்கும் அனைவரும் இந்தவார எவிக்‌ஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதனால் இந்தமுறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று யாஷிகா - மஹத் ஆகிய இருவர் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.


அப்போது வீட்டில் இருக்கும் ஒரு நபருக்கு ஷெரின் கடிதம் எழுத வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் அது ஒளிபரப்பப்படாது என்று யாஷிகா கூறினார். ஆனால் ஷெரின் எழுதிய கடிதத்தை அவர் யாருக்கு கொடுக்க விரும்பினாரோ அவரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லும்படி யாஷிகா - மஹத்துக்கு பிக்பாஸ் கட்டளையிட்டார்.

இதை மறுத்த ஷெரின் அக்கடிதத்தை சுக்குநூறாக கிழித்தெரிந்தார். பின்னர் நள்ளிரவில் தனது தவறை உணர்ந்த ஷெரின் கடித்ததை எழுதி பிக்பாஸிடம் படித்துக் கொள்ளும்படி கூறினார்.

இதற்கிடையே தர்ஷன் குப்பையில் கிடந்த அக்கடிதத்தை எடுத்து படித்துள்ளார். அதை இன்றைய புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது நிகழ்ச்சிக்குழு. அதில் ஷெரினை மற்ற போட்டியாளர்கள் கிண்டலடிக்க, கடிதத்தை உனக்கு தான் கொடுக்க நினைத்தேன் ஆனால் இப்போது அதை மாற்றிக் கொள்கிறேன் என்று தர்ஷனிடம் ஷெரின் கூறுகிறார்.ஏன் என்று தர்ஷன் கேள்வி எழுப்ப, நீ எப்படி அதை எடுத்து படிக்கலாம் என்று செல்லக் கோபம் காட்டுகிறார் ஷெரின். இந்த சீசனிலேயே தர்ஷன் - ஷெரின் இடையே இருக்கும் காதலுடன் கூடிய நட்பு பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.வீடியோ பார்க்க: மசாஜ் சென்டர் பெண் மர்ம மரணம் - பக்காடி ரம், நூடுல்ஸ் காரணமா?

First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading