மக்களிடம் நீ நிரூபிக்க வேண்டிய நேரம் இது... லாஸ்லியாவுக்கு தர்ஷன் அட்வைஸ்!

மக்களிடம் நீ நிரூபிக்க வேண்டிய நேரம் இது... லாஸ்லியாவுக்கு தர்ஷன் அட்வைஸ்!
லாஸ்லியா - தர்ஷன்
  • News18
  • Last Updated: September 9, 2019, 12:43 PM IST
  • Share this:
முதல்முறையாக பிக்பாஸ் வீட்டின் தலைவராகியுள்ளார் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் மக்களால் தொடர்ச்சியாக காப்பாற்றப்பட்டு வந்த லாஸ்லியா இந்தவாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வாகியுள்ளார்.

இதற்காக இன்று நடைபெற்ற டாஸ்க்கில் சேரன் வெளியேற்றப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த வனிதா, தர்ஷன் லாஸ்லியாவுக்கு விட்டுக் கொடுத்து விலகினார். அதேபோல் தர்ஷனும் விட்டுக் கொடுக்க லாஸ்லியா வெற்றி பெற்று வீட்டின் தலைவராகியுள்ளார். அதேவேளையில் இருவரும் விட்டுக் கொடுத்த வெற்றி எனக்குத் தேவையில்லை என்று லாஸ்லியா கூறுகிறார்.


இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது புரமோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தர்ஷனிடம் பேசும் லாஸ்லியா, நாங்கள் எல்லோரும் உனது வெற்றிக்காக தியாகம் செய்வது வேண்டாம் என்றால், அது எனக்கு மட்டும் ஏன் வேண்டும் என்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் தர்ஷன், இது தியாகம் அல்ல. ஒரு கேப்டனாக நீ மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுத்தேன். தியாகத்தினால் நான் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த வாய்ப்பை நீ பயன்படுத்திக் கொள் என்கிறார்.

தர்ஷனின் பதிலைக் கேட்கும் லாஸ்லியா, “காரணமே இல்லாமல் ஒருவர் வெளியே போயிருக்கிறார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இப்படியான சூழ்நிலையில் இருக்கும் போது நீ இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார். இவை அனைத்தையும் ரகசிய அறையில் இருந்தபடி அமைதியாக கவனித்து வருகிறார் இயக்குநர் சேரன்.

Loading...

வீட்டுத் தலைவியாக லாஸ்லியா தேர்வாகியுள்ள நிலையில் தனது தனித்திறமையை நிரூபித்து மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.வீடியோ பார்க்க: இருவரைத் தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை - மதுமிதா

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...