மோகன் வைத்யாவாக மாறி கட்டிப்பிடித்து கலாட்டா செய்யும் சாண்டி!

Web Desk | news18
Updated: July 22, 2019, 6:03 PM IST
மோகன் வைத்யாவாக மாறி கட்டிப்பிடித்து கலாட்டா செய்யும் சாண்டி!
பிக்பாஸ் வீட்டில் சாண்டி
Web Desk | news18
Updated: July 22, 2019, 6:03 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டதை அடுத்து சாண்டி, நைனாவாக உருவெடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டதை அடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா ஆகியோரும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று மோகன் வைத்யா வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் புரமோஷன் வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் நடன இயக்குநர் சாண்டி மோகன் வைத்யாவைப் போல் கெட்டப் போட்டு அனைவரிடமும் நகைச்சுவை கலாட்டாவில் ஈடுபட்டு வருகிறார்.


அப்போது மோகன் வைத்யாவைப் போன்றே ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து சாண்டி செய்யும் கலாட்டாவால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். லாஸ்லியாவை சாண்டி கட்டிப்பிடிக்க வந்தபோது அதை அவர் தடுத்து நிறுத்துகிறார். அதனால் பிக்பாஸ் வீடே சிரித்து மகிழ்கிறது.

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...