ஸ்டாப் பண்ணுவீங்களா... ரகசிய அறையிலிருந்து கவினுக்கு கடிதம் எழுதிய சேரன்

கவின் அவர்களுக்கு, வணக்கம் தம்பி, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம்.

news18
Updated: September 10, 2019, 4:58 PM IST
ஸ்டாப் பண்ணுவீங்களா... ரகசிய அறையிலிருந்து கவினுக்கு கடிதம் எழுதிய சேரன்
லாஸ்லியா, சேரன், கவின்
news18
Updated: September 10, 2019, 4:58 PM IST
பிக்பாஸ் வீட்டின் ரகசிய அறையிலிருந்து மற்ற போட்டியாளர்களின் செயல்பாட்டை கவனிக்கும் சேரன் கவினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொருமுறையும் பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்வது வாடிக்கையாகி வரும் நிலையில் இம்முறை பிக்பாஸ் வீட்டின் மன்மதன் டைட்டிலை கவின் பெற்றுள்ளார்.

ஆரம்பத்தில் சாக்‌ஷியிடம் நெருங்கிப் பழகி வந்த கவின், தன்னைப் பயன்படுத்துவதாகக் காரணம் கூறி சாக்‌ஷியை விட்டு விலகினார். பின்னர் லாஸ்லியாவிடம் நெருக்கமாகப் பழகி வரும் கவின், பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பு தான் 3 வருடங்களாக ஒரு ரிலேசன்ஷிப்பில் இருந்ததாக வெளிப்படையாக லாஸ்லியாவிடம் கூறுகிறார். தன்னுடைய கடந்த காலத்தை லாஸ்லியாவிடம் தெரிவித்துவிட்ட கவின், அவரது சம்மதத்துக்காக காத்திருக்கிறார். ஆனால் லாஸ்லியா வெளியில் போய் பேசிக் கொள்ளலாம் என்று பதிலளித்து வருகிறார். இந்தக் காதல் தற்போது பார்வையாளர்களுக்கே போரடித்துவிட்டது.


புகைப்படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்: ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை வெளியிட்ட புகைப்பட கலைஞர்!

அதேவேளையில் லாஸ்லியா தனது அப்பாவாக சேரனைப் பார்க்கிறேன் என்று தெரிவித்திருந்த நிலையில், கவினின் காதல் லாஸ்லியா - சேரன் இடையே விரிசல் ஏற்பட வைத்தது. ஆனால் கடைசி வரை லாஸ்லியாவுக்கு ஆதரவாகவே தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் சேரன்.

சேரன் கடந்தவாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் கவின், லாஸ்லியாவிடம் தனது காதலுக்கான பதிலைச் சொல்லுமாறு நேற்றைய நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த லாஸ்லியா, பார்வையாளர்கள் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு ஏன் வந்தீர்கள்? என்று கேள்வி எழுப்புவதால், வெளியில் போய் பேசிக் கொள்ளலாம் என்கிறார். இவை அனைத்தையும் ரகசிய அறைக்குள் இருந்தபடி கவனித்து வரும் சேரன், லாஸ்லியாவிடம் பதில் சொல்லுமாறு கவின் நிர்பந்திப்பதாக பிக்பாஸிடம் சேரன் புகார் தெரிவித்தார்.

Loading...

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் சேரனின் கடிதத்தை போட்டியாளர்கள் மத்தியில் படித்துக் காட்டும் தர்ஷன், “கவின் அவர்களுக்கு, வணக்கம் தம்பி, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசிக்கொள்ளலாம். விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று. அப்படியிருந்தும் லாஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல சொல்வது நியாயமா? அதை வலியுறுத்தலாமா. செலிபிரேட் பண்ணலாம் என்று அவரை நீங்கள் யோசிப்பது மிகவும் தவறாக தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவீங்களா?” என்று சேரன் கடிதத்தில் கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: இருவரைத் தவிர மற்றவர்கள் என்னை காப்பாற்ற முன்வரவில்லை - மதுமிதா

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...