பிக்பாஸ்: முட்டாள் மாதிரி இருக்கோம்.... வனிதாவை விளாசும் சேரன்

news18
Updated: September 5, 2019, 4:40 PM IST
பிக்பாஸ்: முட்டாள் மாதிரி இருக்கோம்.... வனிதாவை விளாசும் சேரன்
பிக்பாஸ்
news18
Updated: September 5, 2019, 4:40 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அனைத்து போட்டியாளர்களும் வனிதாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்தவார தொடக்கத்தில் அபிராமி, மோகன் வைத்யா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய மூவரும் சிறப்பு விருந்தாளிகளாக வீட்டுக்குள் வந்துள்ளனர். இதில் சாக்‌ஷி வருகையை அடுத்து கவின் - லாஸ்லியா காதலில் விரிசல் ஏற்படும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.


மாறாக ஷெரின் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதை வனிதாவிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார் சாக்‌ஷி. ஆனால் வனிதாவோ ஷெரின், தர்ஷன் மீது காதல்வயப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஷெரின் வனிதாவை வெளுத்து வாங்கியுள்ளார். அதற்கான புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 3-வது புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வனிதாவின் பேச்சை வட்டமாக அமர்ந்து கேட்கும் அனைத்து போட்டியாளர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருகட்டத்தில் இயக்குநர் சேரனும் எவ்வளவு நேரம் கேட்பது வனிதா, முட்டாள் மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கு நாங்க என்கிறார்.Loading...

வீடியோ பார்க்க: அஜித்தின் ரீமேக் படங்கள் ஒரு பார்வை!

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...