லாஸ்லியாவை கடுமையாக எச்சரித்த பிக்பாஸ் - வீட்டில் நடந்தது என்ன?

லாஸ்லியாவை கடுமையாக எச்சரித்த பிக்பாஸ் - வீட்டில் நடந்தது என்ன?
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 23, 2019, 12:49 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் தனது காந்தக் குரலால் லாஸ்லியாவை எச்சரித்துள்ளார் பிக்பாஸ்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் முகன் மற்றும் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார். மீதமுள்ள 5 பேர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தவாரம் ஒவ்வொரு போட்டியாளரும் யாரைக் காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்ற கேள்வியுடன் நாமினேஷன் தொடங்கியுள்ளது. இதையடுத்து கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்ட தர்ஷன், ஷெரின் மற்றும் சாண்டியைக் காப்பாற்ற நினைப்பதாக கூறுகிறார். அதனால் அவரை இரண்டு பச்சை மிளகாயை உண்ண வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார் பிக்பாஸ். எளிதாக பச்சை மிளகாயை சாப்பிட்ட தர்ஷன் அங்கிருந்து மகிழ்ச்சியாக வெளியேறுகிறார்.


அடுத்து வந்த லாஸ்லியா, கவினை காப்பாற்றுகிறேன் என்று கூற அவருக்கும் பச்சை மிளகாயை சாப்பிட கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பச்சை மிளகாயை உண்ண யோசிக்கும் லாஸ்லியாவிடம் தனது காந்தக் குரலில் பேசிய பிக்பாஸ், இது நாமினேஷனுக்கான டாஸ்க் கொஞ்சம் சீரியஸாக இருங்க என்று எச்சரிக்கிறார்.வீடியோ பார்க்க: நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியருக்கு கொடுமை!

Loading...

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...