பிக்பாஸ் வீட்டிலிருந்து சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்?

Bigg Boss Tamil 3 | லாஸ்லியாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

news18
Updated: August 11, 2019, 3:00 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்?
நடிகை சாக்‌ஷி அகர்வால்
news18
Updated: August 11, 2019, 3:00 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாட்கள் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 50 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் 10 போட்டியாளர்களுடன் 11-வது நபராக இணைந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், அபிராமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.


இதில் லாஸ்லியாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில் நடிகை சாக்‌ஷி, அபிராமி ஆகியோருக்கு குறைவான வாக்குகளே பதிவாகியிருப்பதாகவும், மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மூன்றாவது இடம்பிடித்த சாக்‌ஷி அகர்வால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் இந்தவாரம் சரவணன் வெளியேற்றப்பட்டிருப்பதால் சாக்‌ஷியை வெளியேற்ற வாய்ப்பில்லை என்றும், அவர் சீக்ரெட் அறைக்கு அனுப்பப்படலாம் என்றும் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சாக்‌ஷி வெளியேற்றப்படுவாரா அல்லது தக்கவைக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: சரவணன் வெளியேற்றம்...! கமல்ஹாசன் மவுனம் காப்பது   ஏன்?
First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...