பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார்?

 இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகின், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

news18
Updated: August 17, 2019, 3:50 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சி
news18
Updated: August 17, 2019, 3:50 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை அபிராமி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாட்கள் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி 55 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இரண்டாவது வார இறுதியில் முதல் நபராக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால்  ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


கடந்த வாரம் வைல்ட் காட் மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லவில்லை என பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்தனர்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடப்பது வழக்கம். இந்தமுறை இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறியது. விருந்தாளியாக என்ட்ரி கொடுத்தார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருப்பதால் போட்டியாளர்களைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

Loading...

அபிராமிக்கு அட்வைஸ் கொடுத்த வனிதா விஜயகுமார், முகென் பின்னால் நீ ஓடுவதால் அவன் தான் ஹீரோவாகிவிட்டான் என்றும் முகெனுக்கு வெளியில் இருக்கும் காதல் குறித்தும் பேசியுள்ளார்.

இந்த உரையாடலைத் தொடர்ந்து அபிராமி, முகென் இடையே மோதல் வலுத்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தடுக்க பிக்பாஸ் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் முயல்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு சூழ்ந்தது.

மதுமிதாவை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்ட வனிதா, பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறி மதுமிதாவைத் தூண்டி விட்டார்.

இதனால் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்களிடம் நேரடியாக சண்டையிட்டார். அப்போது வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நிலைத்திருக்க வேண்டி பெண்களை பயன்படுத்திக்கொள்வதாகவும் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதனால் கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் இந்த வாரம் அபிராமி குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Also see...

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...