சேரன் பக்கம் நின்ற கமல்... காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சரவணன்

ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கும், சேரனுக்கும் சின்ன ஒரு உரசல் இருக்கிறதே அது என்ன என்ற கேள்வியை சரவணனிடம் முன் வைக்கிறார் கமல்ஹாசன். அதற்கு அவர் ஒரு இயக்குநர் நான் ஒரு நடிகன் என்று சரவணன் பதிலளிக்கிறார்.

news18
Updated: August 3, 2019, 6:43 PM IST
சேரன் பக்கம் நின்ற கமல்... காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சரவணன்
கமல்ஹாசன் | சரவணன்
news18
Updated: August 3, 2019, 6:43 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனிடம் ஒருமையில் பேசியதற்காக நடிகர் சரவணன் மன்னிப்பு கோரியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் 23-ம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், அபிராமி வெங்கடாச்சலம், சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, ரேஷ்மா ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்படுவர்.


வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக போட்டியாளர்கள் மத்தியில் உரையாடுவார். அப்போது வாரம் முழுக்க போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம், சர்ச்சைகள் குறித்தும் பேசப்படும். அதன்படி, நடிகர் சரவணன் மற்றும் இயக்குநர் சேரன் இடையேயான மோதல் குறித்து இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

அதற்கான புரமோஷன் வீடியோவை நிகழ்ச்சிக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கும், சேரனுக்கும் சின்ன ஒரு உரசல் இருக்கிறதே அது என்ன என்ற கேள்வியை சரவணனிடம் முன் வைக்கிறார் கமல்ஹாசன். அதற்கு அவர் ஒரு இயக்குநர் நான் ஒரு நடிகன் என்று சரவணன் பதிலளிக்கிறார்.

நீங்கள் ஏன் சேரனை ஒருமையில் பேசினீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும் போது நான் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது இயக்குநர் சேரன் ஒரு உதவி இயக்குநர். அதனால் அவரை அப்படிப் பேச உரிமை உள்ளது என்று சரவணன் கூறியதை ஞாபகப்படுத்திய கமல்ஹாசன், நீங்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சேரனை அப்படி பேசக்கூடாது என்பது தான் எனது கருத்து என்றும் கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொண்ட சரவணன் சேரன் காலில் விழுந்து மன்னிப்பு கோருகிறார். அதற்கு நான் எப்போதும் உங்கள் முன்னால் ஒரு உதவி இயக்குநர் தான் என்று சேரன் சொல்ல வீடியோ முடிகிறது.

Loading...

கடந்த முறை சேரன் தன்னைத் தவறாக தொட்டார் என்று பழி சுமத்திய மீரா மிதுனை கண்டித்த கமல்ஹாசன், இந்த முறையும் தவறை தட்டிக் கேட்டுள்ளார்.

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...