பிக்பாஸ் சரவணன் என்னிடம் போனில் அழுதார் - பரணி ஓபன் டாக்

news18
Updated: August 7, 2019, 3:35 PM IST
பிக்பாஸ் சரவணன் என்னிடம் போனில் அழுதார் - பரணி ஓபன் டாக்
சரவணன் | பரணி
news18
Updated: August 7, 2019, 3:35 PM IST
மன்னிப்பு கேட்டதற்கு பின்பும் சரவணனை வெளியேற்றியது சரியில்லை என்று முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் பரணி கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டதாக மீராமிதுன் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் உரையாடினார் கமல்ஹாசன். அப்போது பேசிய சரவணன், தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை உரசியதாக வெளிப்படையாக கூறினார்.

இந்த விவகாரத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பின்னணிப் பாடகி சின்மயி இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். இதையடுத்து சரவணனை மன்னிப்பு கோரும்படி பிக்பாஸ் கூறினார். அப்போது கன்பெஷன் ரூமில் பேசிய சரவணன், "கல்லூரியில் படிக்கும் போது நான் செய்த தவறுகள் பற்றி பேசினேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதை சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதுமாக பேச முடியவில்லை. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார்.


இதையடுத்து இந்தவிவகாரம் முடித்துவைக்கப்பட்டது. மீண்டும் சேரனை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார் சரவணன். இந்த விவகாரத்திலும் தனது தவறை உணர்ந்த சரவணன், சேரனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறினார்.இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று சரவணனை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், “பெண்களைப் பற்றிய தவறான கருத்துகளைக் கூறியதால், பிக்பாஸ் குழு உங்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இப்படியே சென்று விடுங்கள்” என்று கூறினார். இப்படியே சென்று விடுங்கள் என்று கூறியதற்கு மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து வெளியேறினார் சரவணன்.

Loading...சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு ஆதரவுக்குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு  நடிகரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான பரணி பேட்டியளித்துள்ளார். அதில், “நான் அவர் வெளியேற்றப்பட்டதை தவறாக செய்தி பரப்பப்படுகிறதோ என்று எண்ணினேன். பின்னர் அவரிடம் போன் செய்து கேட்டேன். அவர் என்னப்பா எதுவும் கெட்ட பெயர் வந்துருச்சா என்று கேட்டு அழுதார். இல்லை என்று கூறினேன். கடந்த 3 நாட்களாக என்னால் டாஸ்க்கில் ஈடுபடமுடியவில்லை என்றும் ஒருவிதமான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் என்னிடம் கூறினார்.

தற்போது சேலத்தில் இருக்கிறார். அவரது மகனுக்கு காய்ச்சல் இருந்தது. அவர் வீட்டுக்குச் சென்றதும் அது சரியாகிவிட்டதாக என்னிடம் சொன்னார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட பின்னரும் வெளியேற்றப்பட்டது சரியில்லை” என்று பரணி கூறியுள்ளார்.

படிக்க: சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் காரணமா? - பிக்பாஸுக்கு ரசிகர்கள் போட்ட குறும்படம்

வீடியோ பார்க்க: சூர்யாவின் நீட் அரசியல்

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...