கவினை வச்சு செய்ய உள்ளே நுழைந்த சாக்‌ஷி!

கவினை வச்சு செய்ய உள்ளே நுழைந்த சாக்‌ஷி!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 3, 2019, 12:37 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், சேரன், ஷெரின், முகென், லாஸ்லியா ஆகியோர் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரமோவில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வீடியோவில் மோகன் வைத்யா தன்னுடைய ட்ரவுசரை சாண்டியிடம் கேட்க, சாக்‌ஷி ஷெரினிடம் கைகுலுக்கி நீதான் வெற்றிபெற வேண்டும் என்கிறார்.

முன்னதாக சாக்‌ஷியுடனான கவினின் காதல் குறித்து நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேசியிருந்தார். இதனால் கவின் கடும் கோபமடைந்தார். வீட்டிலிருக்கும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் வனிதாவின் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமைதி காத்தனர். லாஸ்லியா மட்டும் வனிதாவிடம் வாதிட்டார்.

Loading...

மேலும் சேரன்,ஷெரின் ஆகியோர் பல வெற்றிகளைப் பார்த்துவிட்டதாகவும், அதனால் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி இருவரையும் நாமினேட் செய்தார் கவின்.

இதனால் கோபமடைந்த வனிதா வெளியிலிருக்கும் காரணங்களைச் சொல்லி நாமினேட் செய்யக்கூடாது என்றும், தேவையில்லாமல் கவின் அனுதாபத்தை ஏற்படுத்தி கேம் விளையாடுவதாகும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த சண்டை இன்றும் தொடர்கிறது. அதை இன்றைய நாளின் முதல் புரமோவாகவும் நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

இதுஒருபுறமிருக்க சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க் ஒன்றில், சாக்‌ஷி தன்னை  தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் கூறியிருந்த நிலையில் அதை மறுத்து நடிகை சாக்‌ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சாக்‌ஷி வீட்டுக்குள் சென்றிருப்பது கவினுக்கு ஆபத்தாகவே முடியும் என தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.வீடியோ பார்க்க: வலுக்கும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மோதல்!

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...