பிக்பாஸ்: முகெனிடம் ஐ லவ் யூ சொல்லும் அபிராமி - வீடியோ

news18
Updated: August 7, 2019, 12:39 PM IST
பிக்பாஸ்: முகெனிடம் ஐ லவ் யூ சொல்லும் அபிராமி - வீடியோ
பிக்பாஸ் வீட்டில் அபிராமி
news18
Updated: August 7, 2019, 12:39 PM IST
முகெனிடம் தனது காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் அபிராமி.

100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 45 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யால், மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் உள்ளனர்.


சாக்‌ஷி அகர்வால், கவின், லாஸ்லியா ஆகியோர் முக்கோணக் காதலின் முக்கிய புள்ளிகளாக இருக்கும் நிலையில், அதை ஒவ்வொரு வாரமும் தங்களது உத்திக்காக பயன்படுத்த வேண்டாம் என்று சமீபத்தில் அறிவுரை வழங்கினார் கமல்ஹாசன்.

அதையடுத்து தற்போது கவினிடமிருந்து விலகியிருக்கும் சாக்‌ஷி, முகெனிடம் பழகுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதைப்பார்த்து அபிராமியும் அவ்வப்போது கோபமடைகிறார்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில், அபிராமி தனது காதலை முகெனிடம் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு முகென் சம்மதம் தெரிவிப்பதுபோல் பதிலளிக்கவில்லை. அபிராமியும் என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள சொன்னேனா என்று முகெனிடம் தெரிவித்துள்ளார்.

Loading...

ஆரம்பத்திலிருந்தே அபிராமி முகென் மீது காதல்வயப்பட்டவராகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் முகென் தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக கூறி வருகிறார். பிக்பாஸில் அபிராமி தன்னைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் உத்தியா இது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: சரவணன் வெளியேற்றம்: பிக்பாஸுக்கு ரசிகர்கள் போட்ட குறும்படம்

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...