சான்டி மாஸ்டரின் குடும்பத்தைச் சந்தித்த அபிராமி!

சான்டி மாஸ்டரின் குடும்பத்தைச் சந்தித்த அபிராமி!
பிக்பாஸ் அபிராமி
  • News18
  • Last Updated: August 22, 2019, 2:37 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய நடிகை அபிராமி, சக போட்டியாளரான சான்டியின் மனைவி மற்றும் மகளை சந்தித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இதில் 2-வது வாரத்தில் மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை அபிராமி, தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார். அதன்படி மோகன் வைத்யாவை முதல் ஆளாக சந்தித்த அபிராமி, அவரது நெருங்கிய தோழி சாக்‌ஷி அகர்வாலையும் சந்தித்தார்.


அவரைத் தொடர்ந்து சான்டி மாஸ்டரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அபிராமி, அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணனும் சாண்டி குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
View this post on Instagram
 

Today was our BB baby Lala day 💋💋💋


A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on


வீடியோ பார்க்க: பிக்பாஸ் மதுமிதா மீது காவல்நிலையத்தில் விஜய் டிவி புகார்!

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்