ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிலம்பத்தில் அசத்தும் பிக்பாஸ் சீசன் 5 பெண் பிரபலம் - வைரலாகும் வீடியோ!

சிலம்பத்தில் அசத்தும் பிக்பாஸ் சீசன் 5 பெண் பிரபலம் - வைரலாகும் வீடியோ!

சுருதி

சுருதி

திரைத்துறையில் 2012-ல் நுழைந்த இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோ பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்பார்கள் என்று பல பிரபலங்களின் பெயர்கள் கூறப்பட்ட நிலையில், துவக்க நிகழ்ச்சியில் முற்றிலும் வித்தியாசமான பல போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் உலகநாயகன் கமல்ஹாசன். இந்த ஆண்டு பிக்பாஸ் ஷோவில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.

இமான் அண்ணாச்சி, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன், நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு உள்ளிட்ட சிலரை தவிர மற்றவர்கள் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் இல்லை. தமிழ் பிக்பாஸில் முதல் திருநங்கையாக உள்ளே நுழைந்து இருக்கிறார் நமிதா மாரிமுத்து. போட்டியாளர்களில் சுமார் 10 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பலர் மாடலிங் துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமான நடிகை பாவனி ரெட்டி, தஞ்சாவூரை சேர்ந்த மருத்துவர் மற்றும் ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரி மற்றும் நடிகை மற்றும் மாடலுமான சுருதி பெரியசாமி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். சீரியல் நடிகை பாவனி ரெட்டி தனது 21 வயதில் ஒரு மாடலாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார்.

திரைத்துறையில் 2012-ல் நுழைந்த இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் வஜ்ரம் மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான இவர் சின்னத்தம்பி சீரியலில் நந்தினியாக நடித்து பிரபலம் அடைந்தார். தெலுங்கு நடிகரான பிரதீப் குமாரை இவர் திருமணம் செய்து கொண்டார்.

எனினும் தனிப்பட்ட சில பிரச்சனைகளால் நடிகர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து 8 மாதங்களிலேயே இவரது கல்யாண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. மற்றொரு போட்டியாளரான சுருதி பெரியசாமி நவம்பர் 24, 1995 சேலத்தில் பிறந்தவர். மாடலிங் மற்றும் நடிப்பு தவிர பல்வேறு தனித்திறமைகளை கொண்டவர். இவர் சிலம்பம் சுழற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் தஞ்சையின் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஐக்கி பெர்ரி ஒரு மருத்துவர் (Cosmetologist), ராப் பாடகி, பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர். பிரபல முன்னணி இசையமைப்பாளரான அனிருத்துடன் இவர் எடுத்து கொண்ட போட்டோவை பிக்பாஸ் ரசிகர்கள் ஆன்லைனில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5