இயக்குநராக களம் இறங்கும் பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி!

சுரேஷ் சக்ரவர்த்தி

புகழ்பெற்ற கர்நாடக பாடகியும், நடிகையுமான எம்.எஸ்.சுப்புலட்சுமி-யின் வாழ்க்கை வரலாற்றை அவர் இயக்குகிறார்.

 • Share this:
  பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  ஆர்டிஸ்ட் மேனேஜர், தொலைக்காட்சி நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், லைன் புரொடியூசர், மற்றும் இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. 'எனக்குள் ஒருத்தி' என்ற சீரியலில், ஆண் மற்றும் பெண் உள்ளிட்ட ஆறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் சுரேஷ். நவீன தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், ரசிகர்களை அந்த கதாபாத்திரங்களுடன் நெருக்கமாக வைத்தார்.

  கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு, சுரேஷ் சக்கரவர்த்தி இளம் தலைமுறையினரிடம் பிரபலமானார். பிக் பாஸில் கலந்துக் கொண்ட பிறகு ரசிகர்களால், தாத்தா என்று அன்போடு அழைக்கப்படுகிறார் சுரேஷ். பிக் பாஸ் இல்லத்தில் மூத்தவராக இருந்த இவர், அனைவரையும் அன்புடன் அரவணைத்து சென்றார்.

  அதோடு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாருடன் இணைந்து பல பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்தார். இதற்கிடையே நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட முரண்பட்டால், வனிதா அந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இதையடுத்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சோலோ பெர்ஃபார்மென்ஸை கொடுத்து வருகிறார். தவிர, வசந்தபாலன் இயக்கும் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Bigg Boss Suresh Chakravarthy, suresh chakravarthy MS Subbulakshmi Biopic, suresh chakravarthy wikipedia, suresh chakravarthy age, suresh chakravarthy daughter, suresh chakravarthy sripriya, suresh chakravarthy wife, suresh chakravarthy family, suresh chakravarthy old photos, Bigg Boss Suresh Chakravarthy movies, Bigg Boss Suresh Chakravarthy tamil movies, Bigg Boss Suresh Chakravarthy movie list, பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி எம் எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு, சுரேஷ் சக்கரவர்த்தி விக்கிபீடியா, சுரேஷ் சக்கரவர்த்தி வயது, சுரேஷ் சக்கரவர்த்தி மகள், சுரேஷ் சக்கரவர்த்தி குடும்பம், சுரேஷ் சக்கரவர்த்தி பழைய புகைப்படங்கள், பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்கள், பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி திரைப்பட பட்டியல்
  எம்.எஸ்.சுப்புலட்சுமி


  இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி விரைவில் திரைப்பட இயக்குநராக அறிமுகமாவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. புகழ்பெற்ற கர்நாடக பாடகியும், நடிகையுமான எம்.எஸ்.சுப்புலட்சுமி-யின் வாழ்க்கை வரலாற்றை அவர் இயக்குவதாக தெரிகிறது. இதனை தயாரிப்பாளர் JSK சதீஷ் தயாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: