ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திட்டு வாங்கிய கமல்ஹாசனிடம் கைத்தட்டல்கள் வாங்கிய பிக் பாஸ் பிரியங்கா!

திட்டு வாங்கிய கமல்ஹாசனிடம் கைத்தட்டல்கள் வாங்கிய பிக் பாஸ் பிரியங்கா!

பிக் பாஸ் பிரியங்கா

பிக் பாஸ் பிரியங்கா

பிரியங்காவை பாராட்டி கமல்ஹாசன் எழுந்து நின்று கைத்தட்டுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சூப்பர் சிங்கரில் பிக் பாஸ் பிரியங்கா பாடும் பாட்டுக்கு எழுந்து நின்று கைத்தட்டுகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கர் பிரியங்காவின் ரசிகர்கள் கூட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு என பிரிக்கலாம். அதுவரை ஆங்கர் பிரியங்காவை ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வந்தனர். அவரை பற்றிய எந்த ஒரு நெகடிவ் கமெண்டுகளையும் பார்க்க முடியாது. பிரியங்கா வந்தா மட்டும் போதும் என்ற அவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்தனர். சூப்பர் சிங்கரில் மா.கா.பா பிரியங்கா காம்போ மிகப் பெரிய ஹிட் அடித்தது. விஜய் டிவி டிடிக்கு பிறகு பிரியங்கா தான் என்ற நிலையும் வந்தது.

எல்லாம் போதும் பிரேக் வேணும்.. விஜய் டிவியை விட்டு விலகுகிறாரா பிரியங்கா?

அப்போது தான் பிக் பாஸ் சீசன் 5 வாய்ப்பு பிரியங்காவுக்கு வர, அவரும் வீட்டுக்குள் சென்றார். முதல் 2 வாரம் பிரியங்கா அவராகவே இருந்தார். பின்பு அவருக்கும் தாமரைக்குமான சண்டை மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவரை பிரியங்காவின் காமெடி முகத்தை மட்டுமே பார்த்த ரசிகர்கள், அவரின் கோபம், அழுகை,போட்டி குணத்தை பார்த்து சற்று ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரம் இவருக்கும் டைட்டில் வின்னர் ராஜூவுக்குமான கெமிஸ்ட்ரி காமெடியில் பயங்கரமாக ஹிட் அடித்தது. ஆனால் தாமரையுடன் பிரியங்கா பயங்கரமாக சண்டை போட்டுவிட்டு, கொஞ்ச நேரத்திலே கட்டிலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தை மக்கள் விரும்பவில்லை. இதனால் நெகடிவ் கமெண்டுகள் பறக்க தொடங்கின. பிரியங்கா நடிக்கிறார் என்ற பேச்சும் எழுந்தது.

புகழின் உச்சத்தில் பிக் பாஸ் தாமரை… ஷாப்பிங் போன இடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

வார இறுதியில் கமல்ஹாசன் வரும் எபிசோடிலும் இதுவே நடந்தது. சனி ஞாயிறு வந்தாலே பிரியங்கா திட்டு வாங்க ரெடி ஆகிவிடுவார். கமலும் சுற்றி வளைத்து எப்படியெல்லாம் ஹிண்ட் கொடுக்க முடியுமோ அப்படி எல்லாம் கொடுப்பார். ஆனால் பிரியங்கா அதை புரியாதது போலவே பேசுவார். இதனால் கமல்ஹாசனும் பிரியங்காவை இலை மறை காயாக திட்டம் செய்வார். இப்படி இருக்கையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் கமல் முன் பிரியங்கா மன்மதன் அம்பு படத்தில் வரும் ’whos the hero’ பாடலை பாடி காட்டுகிறார்.

' isDesktop="true" id="753157" youtubeid="xKQ-plnIWlc" category="television">

அந்த பாடலை இதுவரை பிரியங்கா பலமுறை பாடியுள்ளார். எல்லாம் டைமும் மேடையில் கைத்தட்டல்கள் விசில்கள் பறக்கும். அப்படி தான் இந்த முறையும் நடக்கிறது. பிரியங்காவை பாராட்டி கமல்ஹாசன் எழுந்து நின்று கைத்தட்டுகிறார். அதனால் பிரியூ வழக்கம் போல் சந்தோஷத்தில் கத்த தொடங்கிவிடுகிறார். இந்த வீடியோ விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Anchor Priyanka, Vijay tv