ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வதந்தி எல்லாம் இல்லை.. கண்டிப்பா இருக்கு! ஹவுஸ்மேட்ஸை வச்சி செய்யும் பிக் பாஸ் ராஜமாதா

வதந்தி எல்லாம் இல்லை.. கண்டிப்பா இருக்கு! ஹவுஸ்மேட்ஸை வச்சி செய்யும் பிக் பாஸ் ராஜமாதா

பிக் பாஸ்

பிக் பாஸ்

கமல்ஹாசனிடம் தைரியமாக பேசிய போட்டியாளர்கள் சிவகாமி அம்மாவிடம் பதுங்கினர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்க வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் ,இரண்டாவது நாளே தனது அதிரடியை காட்டி ஹவுஸ்மேட்ஸை மிரட்டி எடுக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் 5 சீசன் கடந்த மாதம் தொடங்கியது. கடந்த 4 சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், தற்போது 6 பேர் வெளியேறி விட்ட நிலையில் மீதமுள்ள போட்டியாளர்களுடன் தொடர்கிறது. இதில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 3 பேர் உள்ளே நுழைந்துள்ளனர். ரீ-எண்ட்ரியாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா, முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். அவரை தொடர்ந்து கோரியோகிராபர் அமீர் பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தார். மூன்றாவது வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் உள்ளே நுழைந்துள்ளார்.

இதனால் நிகழ்ச்சி சூடுப்பிடிக்க தொடங்கியது. இந்த நேரத்தில் தான், அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை மருத்துவமனையிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். சனிக்கிழமையான நேற்று, ரம்யா கிருஷ்ணனை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வைத்தார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ராஜமாதா .

முதல் நாளே போட்டியாளர்களை பற்றி ஒன்லைன் ஸ்டோரி சொன்னார். பின்பு சிபி மற்றும் அக்‌ஷரா விஷயத்தில் குறும்படமும் போட்டு காண்பித்தார். கமல்ஹாசனிடம் தைரியமாக பேசிய போட்டியாளர்கள் சிவகாமி அம்மாவிடம் பதுங்கினர். இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="625707" youtubeid="QzNaM-AHh8I" category="television">

இதில் ராஜமாதா எவிக்‌ஷன் குறித்து பேசுகிறார். ”சன் டே ஃபன் டேலாம் இல்லை. அதே போல் இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்ற வதந்தியும் பரவி வருகிறது. அதிலும் உண்மை இல்லை. கண்டிப்பாக எவிக்‌ஷன் உண்டு” என்றப்படியே கார்டை தூக்கி காட்டுகிறார். புரமோ மூலம் இந்த வாரம் கண்டிப்பாக எவிக்‌ஷன் இருப்பது உறுதியாகி விட்டது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bigg Boss Tamil 5, Vijay tv