ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தாலியை திருடிட்டாங்க.. பிக் பாஸில் இருக்கும் கணவரை நினைத்து உருகும் திருமதி சினேகன்!

தாலியை திருடிட்டாங்க.. பிக் பாஸில் இருக்கும் கணவரை நினைத்து உருகும் திருமதி சினேகன்!

சினேகன் - கன்னிகா

சினேகன் - கன்னிகா

கடந்த 8 வருடங்களாக சினேகனும் கன்னிகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த தகவல் பலருக்கும் தெரியாமல் இருந்து இருக்கிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக இருக்கும் கவிஞர் சினேகன் சிறப்பான முறையில் விளையாடி வந்தாலும் அவ்வப்போது அவர் தனது மனைவி கன்னிகாவை நினைத்து வருத்தப்படுவது நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். போன வாரம், புது தொகுப்பாளராக உள்ளே வந்த நடிகர் சிம்பும் இதை சினேகனிடம் கேட்டு இருந்தார். “நல்லா கேம் விளையாடுறீங்க.. திடீரென்று காணாமல் போயிடிறீங்க.. என்ன காரணம்? அவங்கள நினைச்சி வருத்தப்படுறீங்களா? அப்படின்னு கேட்டு இருந்தார். அதற்கு ஆம் என்ற பதிலை சினேகன் சுத்தி வளைத்து சொல்லி இருந்தார்.

  அதுமட்டுமில்லை, சினேகன் முதல் நாள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்லும் போது அவரது மனைவி கன்னிகாவும் உடன் வந்து இருந்தார். அப்போது சினேகன், அவருக்காக கவிதை வாசித்த போது கன்னிகா தேம்பி தேம்பி அழுத வீடியோ இணையத்தில் படு வைரலானது. இவர்களின் திருமணம் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இருவரும் அதை தள்ளி வைத்துவிட்டு தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

  இதையும் படிங்க.. பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய பிரபலம் விலகல்?

  அதுமட்டுமில்லை, கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது தொடர்ந்து சினேகனை நினைத்து உருகும் கவிதை, வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வருகிறார். கன்னிகாவுக்கும் சினேகனுக்கும் இடையில்  கிட்டத்தட்ட 10 வயதுக்கு மேல் வயது வித்தியாசம் என்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் ஒன்று. ஆனால் அண்மையில் கன்னிகா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் புரிதல் தான் முக்கியம் வயது இல்லை என மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Kannika Ravi (@kannikaravi)  அதுமட்டுமில்லை, கடந்த 8 வருடங்களாக சினேகனும் கன்னிகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த தகவல் பலருக்கும் தெரியாமல் இருந்து இருக்கிறது. முதன்முறையாக சினேகனிடம் கன்னிகா காதலை சொன்ன விதத்தையும் பல பேட்டிகளில் கன்னிகா குறிப்பிட்டு வருகிறார். முதன்முறையாக காதலை சொன்னது சினேகன் என்றாலும், அதற்கு பதில் சொல்ல கன்னிகா 5 மாதம் எடுத்துக் கொண்டாராம். அதே போல் கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவது அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த தீப ஒளியில் தான் தனது காதலை கன்னிகா சொல்லி இருக்கிறார். அப்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் புரபோஸ் செய்து இருக்கிறார். அந்த தாலியை கையில் வைத்து சினேகன் ஃபோட்டோவும் எடுத்துக் கொண்டாராம். மிகவும் செண்டிமெண்டாக இருவரும் அந்த தாலியை பத்திரமாக வைத்திருந்தனராம். ஆனால் ஒரு நாள் அது திருடு போய்விட்டதாம். அதை தாங்கி கொள்ள முடியாமல் தாலி திருடு போய்விட்டது என கன்னிகா பல நாள் அழுதுக் கொண்டே இருந்தாராம். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை சினேகன், பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கும் இந்த நேரத்தில் கன்னிகா ரசிகர்களுக்காக பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil, Vijay tv