பிக் பாஸ் ஷிவின் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதில் இரண்டாவது ரன்னராக இடம் பிடித்தார் ஷிவின் கணேசன். திருநங்கையான இவர் டைட்டிலை வெல்வார் அல்லது இரண்டாவது இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் அவர் விஜய் டிவி-க்கு மீண்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா எனக் குறிப்பிட்டு புகைப்படமும் வெளியிட்டிருந்தார் ஷிவின். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.