ஷிவானிக்கு பாலா அண்ணனா? அதிர்ச்சியான ரசிகர்கள்...

பாலாஜி முருகதாஸ் - ஷிவானி நாராயணன்

சில தினங்களுக்கு முன்பு ரக்‌ஷா பந்தன் எனப்படும், சகோதரர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

 • Share this:
  பிக் பாஸ் பாலாஜிக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்திருந்தார் ஷிவானி நாராயணன்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தனது கலர் ஃபுல்லான படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதோடு நடன வீடியோக்களையும் பகிர்ந்துக் கொள்கிறார்.

  இதற்கிடையே கடந்த பிக் பாஸ் 4-ம் சீசனில் கலந்துக் கொண்ட ஷிவானி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரோ சுவாரஸ்யமாக எதையும் செய்யாமல், சக போட்டியாளர் பாலாவுடன் நேரம் செலவிடுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்திருப்பதாக பார்வையாளர்கள் மட்டுமின்றி, நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்த சக போட்டியாளர்களும் கூறினர்.

  Bigg Boss Shivani Narayanan wishes Balaji Murugadoss for Raksha Bandhan, shivani narayanan, bigg boss shivani, shivani dance, shivani narayanan bigg boss, ஷிவானி நாராயணன், பிக் பாஸ் ஷிவானி, ஷிவானி டான்ஸ், shivani narayanan wikipedia, shivani narayanan age, shivani narayanan tv shows, shivani narayanan instagram, shivani narayanan phone number, shivani narayanan studies, shivani narayanan movie list tamil, shivani narayanan birthday, balaji murugadoss, balaji murugadoss wife, balaji murugadoss age, balaji murugadoss cast, balaji murugadoss height, balaji murugadoss biography, balaji murugadoss sister, balaji murugadoss siblings, ஷிவானி நாராயணன் பாலாஜி முருகதாஸ், பாலாஜி முருகதாஸ், பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ்
  பாலாஜி முருகதாஸுடன் ஷிவானி


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தார் ஷிவானி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரானார் பாலா. நிகழ்ச்சி முடிந்த பின்பு, இவர்கள் வெளியில் சந்தித்துக் கொண்டனர். இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ரக்‌ஷா பந்தன் எனப்படும், சகோதரர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

  அப்போது பாலாவுக்கு வாழ்த்து சொல்லி, இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார் ஷிவானி. இதைப் பார்த்த ரசிகர்கள், பாலா எப்போது ஷிவானிக்கு அண்ணனானார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: