கமல் ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக் பாஸ் பிரபலம்!

விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்

சில வாரங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

 • Share this:
  கமல் ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் ஷிவானி நாராயணன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. முன்னதாக விக்ரம் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  Bigg Boss Shivani Narayanan Latest Images, shivani narayanan hot images, bigg boss shivani, shivani hot dance, ஷிவானி நாராயணன், பிக் பாஸ் ஷிவானி, ஷிவானி ஹாட் படங்கள், Bigg Boss Shivani Narayanan beach photos, Bigg Boss Shivani Narayanan beach photo with her mom, Bigg Boss Shivani Narayanan hot photos, ஷிவானி நாராயணன் ஹாட்
  ஷிவானி நாராயணன்


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சில வாரங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அதோடு இந்தப் படம் ஒரு கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

  அதாவது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஷிவானி வரும் 24-ம் தேதி காரைக்குடியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: