• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 2 டோஸ் தடுப்பூசி போட்டும் விடாத கொரோனா... தொற்றுக்கு ஆளான பிக் பாஸ் ஷெரின்

2 டோஸ் தடுப்பூசி போட்டும் விடாத கொரோனா... தொற்றுக்கு ஆளான பிக் பாஸ் ஷெரின்

ஷெரின்

ஷெரின்

தன்னுடன் கடந்த 3-4 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
    நடிகை ஷெரின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதோடு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக திரையை விட்டு ஒதுங்கியிருந்த ஷெரின், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


    உடற்பருமனால் அவதிப்பட்ட ஷெரின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் போது எடை குறைந்து, புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.



     




    View this post on Instagram





     

    A post shared by Sherin Shringar (@sherinshringar)






    இந்நிலையில், தற்போது நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தன்னுடன் கடந்த 3-4 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஷெரின், விரைவில் நலம் பெறுவேன் எனவும் ஷெரின் கூறியுள்ளார்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஷெரின் தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: