தவறான பரிசோதனை முடிவால் பாதிக்கப்பட்ட ஷெரின் - அவரே வெளியிட்ட பதிவு

ஷெரின்

தனக்கு கொரோனா தொற்று என்று வெளியான முடிவில் தவறு நடந்திருக்கலாம் என மருத்துவர் சொன்னதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் ஷெரின்.

 • Share this:
  நடிகை ஷெரின் தனக்கு கொரோனா தொற்று என வெளியான ரிசல்ட்டில் தவறு நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதோடு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக திரையை விட்டு ஒதுங்கியிருந்த ஷெரின், நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

  Bigg Boss Sherin false Coronavirus, bigg boss sherin, bigg boss sherin shringar, sherin shringar photoshoot, sherin shringar coronavirus, sherin shringar covid 19, sherin shringar, sherin shringar facebook, sherin shringar age, sherin beauty, sherin shringar instagram, sherin shringar coimbatore address, sherin shringar real name, sherin shringar marriages, coronavirus sherin, sherin covid 19, ஷெரின், பிக் பாஸ் ஷெரின், பிக் பாஸ் ஷெரின் திருமணம், ஷெரின் படங்கள், ஷெரின் பிக் பாஸ், ஷெரின் கொரோனா வைரஸ், ஷெரின் கொரோனா தொற்று
  ஷெரின்

  இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் தன்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார் ஷெரின். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட அவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என வியப்பில் ஆழ்ந்தனர் ரசிகர்கள்.   
  View this post on Instagram

  A post shared by Sherin Shringar (@sherinshringar)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Bigg Boss Sherin false Coronavirus, bigg boss sherin, bigg boss sherin shringar, sherin shringar photoshoot, sherin shringar coronavirus, sherin shringar covid 19, sherin shringar, sherin shringar facebook, sherin shringar age, sherin beauty, sherin shringar instagram, sherin shringar coimbatore address, sherin shringar real name, sherin shringar marriages, coronavirus sherin, sherin covid 19, ஷெரின், பிக் பாஸ் ஷெரின், பிக் பாஸ் ஷெரின் திருமணம், ஷெரின் படங்கள், ஷெரின் பிக் பாஸ், ஷெரின் கொரோனா வைரஸ், ஷெரின் கொரோனா தொற்று
  ஷெரின்

  தற்போது தனக்கு கொரோனா தொற்று என்று வெளியான முடிவில் தவறு நடந்திருக்கலாம் என மருத்துவர் சொன்னதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் ஷெரின். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு இரண்டு முறை தொடர்ச்சியாக பரிசோதனை செய்ததில் நெகடிவ் என வந்துள்ளது. இதனால் இதற்கு முன்பாக 16-ஆம் தேதி செய்த பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என்று வந்த முடிவு தவறாக இருக்கலாம் என்று எனது டாக்டர் தெரிவித்து உள்ளார். பின்னர் 17-ஆம் தேதி நான் மேற்கொண்ட பரிசோதனையிலும், தற்போது மேற்கொண்ட பரிசோதனையிலும் எனக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்புக்காக சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதை தொடர்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: