பிக் பாஸ் கேப்ரியல்லா, ஆஜித் ஆகியோருக்குப் பிறகு தற்போது சென்றாயனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சென்றாயன், விஜய் டிவி-யின் புதிய நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் ஜோடிகளிலும்’ இடம் பெற்றிருந்தார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் வெளியிட்ட அவர், “வணக்கம் மக்களே. நான் நடிக்கல, உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். வாழ்க்கையில ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும்ன்னு எப்பவுமே வாழ்க்கையை பாசிடிவாகவே பார்ப்பவன் நான். ஆனா எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு...
ஆரம்பத்துல கொரோனா வருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது. என்னை வீட்டில் நான் தனிமை படுத்திக்கொண்டேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர். மனைவி மட்டும் அவ்வப்போது உணவு கொடுக்க வருவார். கொரோனா ரொம்ப டேஞ்சரஸ். மக்களே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூடர் கூடம், பொல்லாதவன், ஆடுகளம்,
ரெளத்திரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சென்றாயன், கடைசியாக
பாக்கியராஜ் கண்ணன் இயக்கி, கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.